விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?*  கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்* 
    பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்*   பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*
    மாடக்கொடிமதிள் தென்குளந்தை*   வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்* 
    ஆடல்பறவை உயர்த்தவெல்போர்*  ஆழிவலவனை ஆதரித்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆதரித்து - ஆசைப்பட்டு
கூட சென்றேன் - அவனோடு ஸம்ச்லேஷிக்கச் சென்றேன்,
கோல்வனை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் - அழகியவளையும் நெஞ்சும் முதலானவையெல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து - என்பக்கல் சேஷியாமல் விட்டுப்போம்படியாக இழந்து
பல வளையார் முன் வைகல் பரிக அழிந்தேன் - பல வளைகளையுடைய பெண்டுகள் முன்னே நெடுங்கால மாகவே என் இயல்புமாறப் பெற்றேன்

விளக்க உரை

வென்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்டு நிற்பது, புண்ணில் புளிப்பெய்தாலொக்குந் தீமைகளை மனைதோறுஞ் செய்வது, உருகவைத்தகுடத்தோடு வெண்ணெய் றிச்சியுடைத்திட்டுப் போந்து அருகிருந்தார் தம்மையநியாயஞ்செய்வது, இல்லம்புகுந்தொருமகளைக் கூவி கையில்வளையைக் கழற்றி கொண்டு கொல்லையில் நின்றுங் கொணர்ந்துவிற்ற அங்கொருத்திக்கவ்வளை கொடுத்து நல்லன நாவற்பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிப்பது, ஆற்றிலிருந்து விளையாடுபவர்களைச் சேற்றாலெறிந்து விளைதுகில் கைக்கொண்டு காற்றிற்கடியனாயோடி யகம்புகுவது, வண்டமர் பூங்குழலார் துகில் கைக்கொண்டு விண்டோய் மரத்தேறுவது, மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம்புக்குக்கச் சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறி நிச்சலும் தீமைகள் உரலோடாய்ச்சி யொண்கயிற்றால் விளியாவார்க்க வாப்புண்டு விம்மியழுவது, பஞ்சனுங்காளிதோள் விரும்பியது, குன்றெடுத்தாநிரை காத்துக் கோவலனாய்க் குழலூதியூதிக் கன்றுகள் சாமாறவளையெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டது, நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்னத் துறியவளும் திருவுடம்பிற்பூச ஊறியகூனினையுள்ளே யொடுங்க ஏறவுருவியது. வார்கடா வருவியானை மாமலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி ஊர்கொள்திண்பாகனுயிர்செகுத்து பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்ப் பாரதம் கைசெய்த்து, பற்றலர்வீயக் கோல்கையில் கொண்டு மலைபுரைதோள் மன்னவரும் மாதரும் மற்றும் பலர் குலைய நூற்று வரும் பட்டழியப் பாரத்தன் நிலைவளையத் திண்டேர் மேல் முன்னின்றது, பாழியால் மிக்க பார்த்தனுக்கருளிப் பகலவனொளிகெடப் பகலே ஆழியாலன்றஙகாழியை மறைத்தது, கொல்லாமாக்கோல்கொலை செய்து பாரதப்போரெல்லாச் செனையுமிருநிலத்தவித்தது, மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய்மாண்டானை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தது, படர்புகழ்ப் பார்த்தனும் வைதிகலுமுடனேறத் திண்டோகடவிச் சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளையுடலொடுஙகொண்டு கொடுத்தது முதலான மாயக்கூத்துக்கள் பலவும் இங்கு அது ஸந்திக்கவுரியவை. (ஆடல்பறவையுயர்ந்த) எம்பெருமான் தன் மீதேறிச் சாரிகை யெழுந்தருளப்போவதை நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியின் கனத்தாலே சிறகை விரித்தடித்துக்கொண்டு கூத்தாடிநிற்பது கருடப்பறவையின் இயல்வு, அதுபற்றி “ஆடல் பறவை“ என்கிறது. (வெல்போராழி) விடுத்த திசைக்கருமம் திருத்துமவனான திருவாழியாழ்வான் எந்தப்போர்க்களத்துச் சென்றாலும் வெற்றியோடே மீள்வளென்க. வலவன் என்றது – திருவாழியாழ்வானை வலத்திலேயுடையவன் என்று பொருள்படுவதுதவிர “வல்லவன்“ என்பதன் தொகுத்தலாகி, திருவாழியைச் செலுத்தவல்லவனென்றும் பொருள்படும் ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் ஆதரித்துப் பரிசழிந்தேன் என்றாராயிற்று.

English Translation

O Sakhis! the wonder-dancer Mayakkuttan lives westwards in Southern Kulandai amid groves and mansions. The deft spinner of the war discus rode away on his dancing Garuda-mount, Filled with desire, I followed; my bangles fell, my heart and all left me. I stand shamed before bangled friends, now hat can I lose?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்