விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காலம் இளைக்கில் அல்லால் வினையேன்  நான் இளைக்கின்றிலன்*  கண்டு கொள்மின்* 
    ஞாலம் அறியப் பழிசுமந்தேன்*  நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*
    நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த*   நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட* 
    கோலவளையொடும் மாமைகொள்வான்*  எத்தனைகாலமும் கூடச்சென்றே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீண்ட முகில்வண்ணன் கண்ணன் - மஹா முகம்போலே இருக்கிற நிறத்தையுடைய கண்ணபிரான்
கொண்ட - அபஹரித்துக்கொண்ட
கோலம்வளையொ - அழகிய வளைகளையும் மேனி நிறத்தையும்
எத்தனை காலமும் கூட சென்றே கொள்வான் - அநேக காலம் கூடவே சென்றாகிலும் மீட்டுக் கொள்ளுகைக்காக
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் - உலகமெல்லா மறியும்படிபடி கடந்து புறப்பட்டாளென்கிறபழியைப் பெற்றேன்,

விளக்க உரை

எத்தனை காலமிளைக்கின்றேனே“ என்ற தலைவியை நோக்கி நங்காய்! பகவத் விஷயம் எட்டவொண்ணாத விஷயமென்பதை நீயே யறிந்திருக்கின்றாயே, நாள் சென்றவாறே இது ஸர்வாத்மநா துர்லபமென்று நீதானே மீளப்போகிறாய், அப்படி நீயாக ஒரு காலவிசேஷத்திலே மீள்வதைக்காட்டிலும் எங்களுடைய வார்த்தை கேட்டு மீண்டதாக எங்கள் வார்த்தைக்கு ஒரு மதிப்பு கொடுக்கலாகாதோ? என்று தோழியர் சொல்ல, காலதத்துவம் முடிந்தாலும் நான் அவனைக் கண்டல்லதுவிடேன் என்கிறாள். (காலமிளைக்கில்லால் வினையேன் நானிளைக்கின்றிலன்) காலம் முடிந்து போனாலும் போகுமேயல்லது நான் இளைத்து மீளுகிறேனென்பது கிடையாதென்றபடி. இங்கு வினையேன் என்றதற்கு இரண்டு வகையான கருத்துரைப்பர், துர்பலம் என்றாலும் மீளவொண்ணாததான விஷயத்திலே ஆசை வைக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன், நீங்கள் சொன்னவார்த்தை நெஞ்சில்படாதபடியான பாபத்தைப் பண்ணினேன். கண்டுகொண்மின் என்றது உறுதிப்பாடு தோன்றச் சொல்லும் வார்த்தை. எத்தனை காலமானாலும் நான் கண்டல்லது விடேனென்பதை நீங்கள் காணவேபோகிறீர்களென்றவாறு. இங்ஙனே சொல்லக்கேட்ட தோழியர் “நங்காய்! அவனே வரப் பார்த்திருக்கையொழிய இப்படி. இத்தலையால் ப்ரபல ப்ரயத்னம் செய்வது நம்குடிக்குப் பழியன்றோ? பழிபரிஹரிக்க வேண்டுவது அவச்யமன்றோ, பெண்டிர்க்குத் தலையானகுணமான நான் தவிரலாமோ? என்று கூற ஞாலமறியப் பழிசுமந்தேன் நன்னுதலீர்! இனி நாணித்தானென்? என்கிறாள். * அஞ்சிறைய மடநாரையில் தூதுவிட்டு * மாசறு சோதியிலே மடலெடுக்க முயன்றபோதே பழிபுகுந்திருக்க நன்னுதலீர்! நுதல் – நெற்றி. என்முகம் வாடிக்கிடக்க உங்கள் முகம் ஒளிபெறு விளங்குவதை! இதுனெ என்று கேட்கிறபடி. கண்டே விடுகிறேன் காண்மின் என்று இப்படியொரு நிர்பந்தம் எதுக்காகக் கொள்ளுகிறாயென்று கேட்டார்க்கு விடையிறுக்கிறது மூன்றாமடி. அவனுடைய வடிவழகை என்னை இப்பாடு படுத்துகிறதென்கிறாள் (நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த) இது முகில்வண்ணனான எம்பெருமானுக்கு விசேஷணம். முகிலுக்கு விசேஷணமென்றுங் கொள்ளலாம். நீலர் மலர் கெடு என்ற மூன்றும் சோதிக்கு விசேஷணங்கள். நீல நிறத்தாயும் எங்கும் பரமபினதாயும் எல்லைகாணபொண்ணாத்தாயுமிருப்பது சோதி, அதனால் சூழப்பட்ட என்றபடி. இது முகில்வண்ணனுக்கு விசேஷணமாம்போது குறையொன்றுமின்றியே அவயிக்கிறது. முகிலுக்கு விசேஷணமாகக் கொள்ளப்பட்டால் அப்படிப்பட்டதொரு விலக்ஷணமான முகிலைச் சிதைந்து சொல்லுகிறதாகக் கொள்ளவேணும்.

English Translation

O Fair, Sakhis! It is Time that will end, not me, just wait and see, I have borne heaps of slander, now what use shying? I will wait as long as I have to, but get my bangles and my radiance from the dark hued effulgent Lord, my Krishna who took them

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்