விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்* த பேர்உதவிக்கைம்மாறாத்* 
    தோள்களை ஆரத்தழுவி என்உயிரை*  அறவிலை செய்தனன் சோதீ,
    தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்*   துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்* 
    தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்*   தமியனேன் பெரிய அப்பனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேர் உதவி - மஹோபகாரத்திற்கு
கைம்மாறு ஆ - பிரதியுபகாரமாக,
என் உயிரை - எனது ஆத்மவஸ்துவை
தோள்களை ஆர தழுவி - தோள்களை நன்றாகத் தடவிக் கொடுத்து
அறவிலை செய்தனன் - பரிபூரண விக்ரயம் செய்து விட்டேன்

விளக்க உரை

“தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்த பேருதவி“ என்கிறாரே, எம்பெருமானுடைய திருவடிகள் இவர்க்குப் பரிபூர்ணத்ருப்தியாகக் கிடைத்து விட்டனவோ? என்னில் ஸம்ஸாரிகளெல்லோரும் உண்டியே உடையே உகந்தோடித் திரியாநிற்க, தாம்மாத்திரம் அப்படியல்லாமல் எம்பெருமானது திருவடிகளையே தாரகபோஷக போக்யமாகக்கொண்டிருக்கும்படி பெற்றவோருதவியையே இங்குப் பேசுகிறாரென்க. ஆறாயிரப்படி யருளிச்செயல் – “ஸம்ஸாரிக்களெல்லாரும் பராக்ருதவிஷயைக தாரக போஷக போக்யராயிருக்கச் செய்தே என்னை உன் திருவடிகளையே தாரகபோஷக போக்யமாயிருக்கும்படி பண்ணியருளினாய், இந்த மஹோபகாரமே அமையாதோ? இவ்வுபகாரத்துக்குக் கைம்மாறாக என்னுடைய ஆத்மாவை உனக்கே அடிமையாகத்தந்தேன“ என்பதாம். “இப்போது திருவடிகளைக் கொடுக்கையாவது ஸம்ஸாரத்தோடு பொருந்தாதபடியையும் தன்னையொழியச் செல்லாதபடியையும் தமக்குப்பிறப்பித்த தசையைப்ரகாசிப்பிக்கை ஸ்ரீ வால்மீகி பகவான் முதலாழ்வார்கள் தொடக்கமானாருண்டாயிருக்க என்பக்கலிலே விசேஷகடாக்ஷம் பண்ணி என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. இப்பேருதவிக்குக் கைம்மாறாக எம்பெருமானுக்கு ஆத்ம வஸ்துவைக் கன்யகாதானம் பண்ணுகிறாராயிற்று ஆழ்வார். ஒருவனுக்கொருவன் கன்னிகையைக் கொடுக்கும்போது தோள்களையாரத் தழுவிக் கொடுப்பது வழக்கம், ஆத்மவஸ்துவுக்கு அவயவமொன்றுமில்லையாகிலும் தம்முடைய அபிநிவேசாதிசயத்தாலே அது தாளுந்தோளும் முடியுமாய்ப் பணைத்ததாகக்கொண்டு “தோள்களையாரத் தழுவியென்னுயிரை அறவிலைசெய்தனன்“ என்கிறார். பரம ஸந்தோஷத்தோடே கொண்டாடிக்கொண்டு ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகிறேனென்றவாறு. “எனதாவியாவியும். நீ – எனதாவியார் யானார்“ “மனமும் வாசகமும் செய்கையும் யானு நீதானே“ என்றவற்றை மறந்தார் ஹர்ஷத்தாலே. “என்னுயிரை அறவிலை செய்தனன்“ என்று ஆழ்வார் சொன்னவாறே எம்பெருமான் தனக்கொரு அபூர்வவஸ்து கிடைத்ததுபோலவே புகர்பெற்று விளங்கினானாயிற்று, அதைக் கீழ்க்கண்ணாலே கண்டறிந்தவாழ்வார் சோதீ! என்று நெஞ்சுகுளிர விளிக்கிறார். இவ்வளவு மாத்திரமேயோ? அவபவங்களும் சதசாகமாகப் பனைக்கத் தொடங்க, பிரானே! என்னுடைய அற்பவாக்கியத்தைக் கொண்டு இப்படியும் உடல்பூரிப்பாய்யோ? இது என்ன பித்து! என்கிறார் பின்னடிகளால். இங்கு நம்பிள்ளையருளிச் செய்யும் ஸ்ரீஸூக்திகள் காணீர், - “ஒரு ஸம்ஸாரியை லபித்து அவாப்தஸமஸ்த காமனானவன் இப்படி ஹ்ருஷ்டனானானென்கிறவிது கூடுமோவென்னில், ஸார்வபௌமனான க்ஷத்ரியனுக்கு ஒருபர்த்தியுண்டென்னா, அபிமதையான மஹிஷிபக்கலிலே சாபலமின்றிக்கே யொழியுமோ? அவாப்தஸமஸ்தகாமத்வமும் ப்ரமாணஸித்தமானால் அப்படியே கொள்ளுமத்தனையன்றோ“

English Translation

O Effulgent Lord of thousand arms and thousand heads, thousand lotus eyes, thousand feet and thousand names! For the gift of your feet to this destitute, -my Lord and Father! – I give my priceless life to you, and embrace you to my heart

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்