விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எங்குவந்துஉறுகோ என்னைஆள்வானே*   ஏழ்உலகங்களும் நீயே* 
    அங்கு அவர்க்குஅமைத்த தெய்வமும்நீயே*  அவற்றுஅவை கருமமும் நீயே*
    பொங்கியபுறம்பால் பொருள்உளவேலும்*   அவையுமோ நீ இன்னேஆனால்* 
    மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே*   வான்புலன் இறந்ததும் நீயே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்னை ஆள்வானே - (இதுவரையில்) என்னை நிர்வஹித்துக்கொண்டு போருமவனே!
எழ் உலகங்களும் நீயே - ஸப்தலோகங்களும் நீயிட்ட வழக்கு,
அங்கு - அந்த லோகங்களில்
அவர்க்கு அமைந்த - (பலன்களைக் கோருகின்ற) அவரவர்களுக்கு ஆராதிக்கும்படி ஏற்படத்தின
தெய்வமும் - தைவங்களும்
நீயே - உன் அவயபூதங்கள்

விளக்க உரை

இது கீழ்ப்பாட்டுக்கே விவரணமானது. ஸகல்லோகங்களும், அவ்வுலகங்களினால் ஆராதிக்கப்படுகிற இந்திரன் முதலிய தெய்வங்களும், அவற்றினுடைய க்ரியைகளும், உலகத்துக்குப் புறம்புள்ள பதார்த்தங்களும் எல்லாம் நீயிட்ட வழக்கு, ஆதலால் என்னுடைய முயற்சியினால் உன்னை நான் எங்ஙனே வந்தடையும்படி? இதற்கு முன்பு நிர்ஹேதுகமாக என்னை நீ விஷயீகரித்தாப்போலே இன்னமும் அந்த க்ருபையினாலேயே விஷயீகரித்தருளாய் என்கிறார். எங்கு வந்து உறுகோ? ஒருவன் மேருமலையிலுச்சியில் நின்றால் அவனை யொருநொண்டி. சென்று கிட்டுவதென்றுண்டோ? சென்றுகிட்டுகைக் குறுப்பாக சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட ஸாதனங்களை யனுஷ்டிக்கத் தமக்கு சக்தியில்லாமை தெரிவிக்கப்பட்டதாமிங்கு. என்னையாள்வானே! – ஆதிமுதல் என்னையாண்டது நீயேயன்றோ. இதுவரை எனக்கு நேர்ந்த நிலைகள் எனது முயற்சியினாலல்லவே, இவ்வளவும் வர நிறுத்தின நீ இனி என்கைபார்த்திருக்கவொண்ணுமோ? என்பது கருத்து. “ஏதாவதீம் கமயிது பதவீம் தயாளோ சேஷாத்வலேசநயநே க இவாதிபார“ என்ற தேசிக ஸ்ரீஸூக்தி இங்குக் காணத்தக்கது. ஏழுலகங்களும் நீயே –“என்னையாள்வாளே!“ என்ற வளவேயேர்? ஸகலலோகங்களுக்கும் ஆவன செய்பவன் நீயேயன்றோ? அபிமுகனான என்னோடு விமுகர்களான மற்றையாரோடு வாசியற எல்லாரையும் நிர்வஹிப்பது நீயேயன்றோ என்றபடி. “ஏழுலகங்களையும் நானா நிர்வஹிக்கிறேன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தைப் பணிந்து அந்தந்த தெய்வத்தினாலன்றோ “அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நியே“ என்று. “வணங்குந் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால் பிணங்குஞ்சமயம் பலபலவாக்கி, அவையவைதோறு அணங்கும் பலபலவாக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்“ என்ற திருவிருத்தப்பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது. “இறுக்குமிறையிறுத்துண்ண எவ்வுலகுக்குந்தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே“ (5-2-8) என்று கீழெ ஸுவ்யக்தமாகவுமருளிச்செய்தார். ஸகல தெய்வங்களும் நீயிட்டவழக்கு, அந்தத் தெய்வங்கள் செய்துபோருகிற செயல்களும் உன்னுடைய அநுப்ரவேசத்தினாலாமவையேயன்றி அவைதாமே செய்யுமவையல்ல என்றபடி. பொங்கிய புறம்பால் பொருளுளவேலும் அவையுமோ நீ – “பொங்கிய“ என்பதைப் புறம்பிலேயும் அந்வயிக்கலாம், பொருளிலேயும் அந்வயிக்கலாம். இந்த லோகங்களிற்காட்டில் விஞ்சிப் புறம்பான மஹதாதிஸமஸ் தபதார்த்தங்களும் நீ யிட்டவழக்கு (அல்லது) அண்டத்துக்குப் புறம்பேயுள்ளதாய், “தசோத்தராண்யாவரணாநி யாநிச“ என்று ஆளவந்தார்ருளிச் செய்தபடியே ஒன்றுக்கொன்று பத்துமடங்கு விஸ்த்ருதமானவையும் நீயிட்டவழக்கு பொங்கிய ஒன்றுக்கொன்று விஸ்த்ருதமாய் அண்டத்துக்குப் புறம்பாய் அதுக்குக் காரணமான மஹ

English Translation

You are the formless, the souls, and the wokeful celestials. You are the seven worlds and the gods therein, and their deeds, if there is anything beyond space, that too is you, So where can I go from here to meet you, my Lord?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்