விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆர்உயிரேயோ அகல்இடம்முழுதும்*  படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்துஅளந்த* 
    பேர்உயிரேயோ பெரியநீர் படைத்து*  அங்கு உறைந்து அது கடைந்துஅடைத்து உடைத்த*
    சீர்உயிரேயோ மனிசர்க்குத்தேவர் போலத்*  தேவர்க்கும்தேவாவோ* 
    ஓர்உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்*   உன்னை நான் எங்கு வந்து உறுகோ?       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆர் உயிரே ஓ - அருமையான உயிராயிருப்பவனே!
அகல் இடம் முழுதும் படைத்து - விசாலமான உலகம் முழுவதையும் ஸ்ருஷ்டித்து
இடந்து - (ஒருகால்) பிரளயாரணவத்தில் மங்கிப்போகாதபடி இடந்தெடுத்து
உண்டு- (ஒருகால்) திருவயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்து - பிறகு வெளிப்படுத்தி

விளக்க உரை

ஆழ்வீர்! பேறுபெறுமவர் நீரான பின்பு அதற்குரிய ஸாதநானுஷ்டானமும் உம்முடைய தலையிலேயாக வேண்டாவோ? அஃது ஒன்றுமின்றிக்கே “அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்“ என்றால் இதுவொரு வார்த்தையோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, நானொரு ஸாதநானுஷ்டானம் பண்ணிவந்து காண்பதென்று ஒன்றுண்டோ வென்கிறாரிதில். ஆருயிரேயோ –உயிர் நீயாயிருக்க நான் என்ன ஸாதநானுஷ்டானம் பண்ணி வந்து கிட்டுவேன்? சரீரத்தை ரக்ஷிப்பது எதுவோ அதுவன்றோ உயிர், சரீரம் தான் தன்னை ரக்ஷித்துக்கொள்வதுண்டோ? கருதரிய வுயிர்க்கு உயிரான நீயிருக்க, சரீரபூதனான நான் ஒரு ஸாதனமனுஷ்டிக்க யோக்யதையுண்டோ? என்பது கருத்து. “அகலிட முழுதும் படைத்திடந்து உண்டுமிழ்ந்தளந்த“ என்றது –நீ தானே படைத்த வுலகுக்கு நன்மை செய்யவேண்டிய காலங்களில் ஒவ்வொன்றும் நீயேயன்றோ செய்து போகின்றாய் என்று எடுத்துக் காட்டுகிறபடி. பூமிப்பரப்படங்கலும் நீயே படைத்தாய், படைக்கப்பட்டவது பிரளயத்திலே நோவுபழ மஹாவராஹமாய் எடுத்துக்கொண்டேறினாய், மற்றுமொருகால் திருவயிற்றிலே வைத்து நோக்கினாய், உள்ளே கிடந்து தளராதபடி வெளிநாடுகாண வுமிழ்ந்தாய், மஹாபலி அபஹரித்துக்கொண்டபோது எல்லை நடந்து மீட்டுக் கொண்டாய், இங்ஙனே ஒவ்வொரு துர்தசையிலும் நீயேயுணர்ந்து நோக்கினாயல்லேயோ? என்று கருத்தை விரிக்க. பேருயிரேயோ! – பெரியோனே! என்று வியாக்கியானம் காண்கிறது “பேரியரேயோ“ என்று பாடமிருந்திருக்கலாமென்று சிலர் எழுதியுள்ளார்கள், “பெரியரேயென்றது நீட்டலாய் பேரியரேயென்று பாடமாகில் ஸ்வரஸம்“ என்றார்கள். முதலடியிலே கூறின செயல்கள் ஸர்வஸாதாரணமாகச் செய்தனை, இரண்டாமடியில் கூறுவன – பிராட்டியாக்காக விசேஷித்துச் செய்தவை. * விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்டலெம்பெருமானே! * என்றும் * பலேக்ரஹிர்ஹி கமலாலாபேந ஸர்வச் ச்ரம * என்றும் சொல்லுகிறபடியே கடல்கடைந்ததும் பிராட்டிக்காக, கடலில் திருவணை கட்டினதும் பிராட்டிக்காக. மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்குந் தேவாவோ – சோறும் தண்ணீரும் தாரகமான மனிதர்களுக்கும் அம்ருதமேதாரகமான தேவர்களுக்கும் எத்தனைவாசி போருமோ அத்தனைவாசி போருமாயிற்று அந்தத் தேவர்களுக்கும் எம்பெருமானுக்கும். தேவர்களை மநுஷ்ய கோடியிலே யெண்ணலாம்படி பரமவிலக்ஷணனானவனே! என்றபடி. ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம் – ஸகல சேதநாசேதநங்களுக்கும் ஏகாத்மாவானவனே! ஆத்மா சரீரத்துக்கு ஹிதசிந்தை பண்ணுமதொழிய சரீரம் தன்னைத்தானே ரக்ஷித்துக் கொள்வதென்பதுண்டோவென்கை. உன்னை நான் எங்குவந்து உறுகோ? – உன்னை நான் எந்த இடத்திலே வந்து கிட்டுவேனென்று கேட்கிறபடியன்று. “உன்னை நான் என்னுடைய யத்நத்தாலே எங்ஙனே ப்ராபிக்கும்படி. யென்கிறார்“ என்பது ஆறாயிரப்படி. “உயிராயிருக்கிற வுன்னை சரீரபூதனான நான் என்ன ஸாதநானுஷ்டானத்தைப் பண்ணி வந்து கிட்டுவேன்? ஆத்மாசரீரத்துக்கு ஹிதசிந்தைபண்ணுமதொழிய, சரீரம் ஸ்வரக்ஷணத்தைப் பண்ண வென்பதொன்றுண்டோ?“ என்பது ஈடு. எங்கு என்றது எங்ஙனே யென்றபடி.

English Translation

O Great soul! You made the Earth, ate, remade, lifted and measured it! O Glorious soul! You made the Ocean, you sleep on it, you churned it, parted it and brided it! O The Oversoul, what gods are to men, you are to the gods, O, Soul of all the worlds, where can I come and meet you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்