விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உமர்உகந்துஉகந்த உருவம்நின்உருவம்ஆகி*  உன்தனக்கு அன்பர் ஆனார்* 
    அவர் உகந்துஅமர்ந்த செய்கை உன்மாயை*   அறிவுஒன்றும் சங்கிப்பன் வினையேன்*
    அமர்அதுபண்ணி அகல்இடம்புடைசூழ்*   அடுபடை அவித்த அம்மானே* 
    அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே*   என்னுடை ஆர்உயிரேயோ!    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமர் அது பண்ணி - அப்படிப்பட்ட பாரதயுத்தத்தை நடத்தி,
அகல் இடம் புடை சூழ் - பூமிப்பரப்பெங்கும் நிறைந்திருந்த
அடு படை - தொலைத் தொழிலில் வல்ல சேனையை
அலித்த - தொலைத்த
அம்மானே - பெருமானே!

விளக்க உரை

பிரானே! நீ உன்னை அடியார்களுக்கு விதேயனாக ஆக்கிவைத்திருக்குமிருப்பு ஒன்று உண்டன்றோ, அதையே நான் சிந்தித்து ஆறியிருப்பது. இப்போது அந்தக் குணத்திலும் அதிசங்கை செல்லாநின்றமையால் தரிக்க மாட்டுகின்றிலேனே! என்செய்வேனென்கிறார். எம்பெருமான் அடியார்களுக்கு விதேயனாயிருக்குமிருப்பை விளங்கச் செய்யவல்ல சரிதைகளைப் பின்னடிகளில் பேசுகின்றார். பூமிப் பரப்படங்கலும் நெளியும்படி மண்ணின் பாரமான சேனைகள் வந்து சூழ்ந்துகொள்ள, மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி, பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய், பத்தூர் பெறாதன்று பாரதங்கைசெய்த அத்தூதன் * என்கிறபடியே ஆனைத்தொழில்கள் செய்து சேனைத்தொகையைச் சாவடினவனே! தேவர்களுக்காக ஆஸுரப்ரக்ருதிகளோடே அம்பேற்றுப்பண்ணின வியாபாரங்களாலே அவர்களுக்குப் பரமபோக்யனானவனே! பிறப்பாலும் இயல்வாலும் அசுரர்களாயுள்ளவர்களுக்கு ப்ரதீகாரமில்லாத நஞ்சுபோன்றவனே! என்னுடைய ஸத்தைக்கு ஹேதுவானவனே! என்று பின்னடிகளில் ஏத்தி, முன்னடிகளில் தம்முடைய அதிசங்கையை விண்ணப்பஞ் செய்கிறார். உமர் – உன்னைச் சேர்ந்தவர்கள் என்றபடி. பக்தர்கள் என்றவாறு. அவர்கள் உகந்த வுருவத்தையே உனக்கு உருவமாகக் கொள்ளுகின்றாய், அன்றியும், அப்படிப்பட்ட அன்பர்கள் மிகவுகந்து ஈடுபடும்படியான செயல்களையே உனது செயலாகக் கொள்ளுகின்றாய் என்று நான் அறிந்திருப்பதுவே இதுவரையில் நான் தரித்திருப்பதற்கு ஹேதுவாயிருந்தது. இந்த அறிவுக்கும் நழுவுதல் நேரும்போலிருக்கின்றதே, பாவியேன் என்செய்வேன்! என்பது முன்னடிகளின் தாற்பரியம். உகந்துகந்த என்றது மிகவுமுகந்த என்றபடி, அறிவொன்றும் சங்கிப்பன் – இந்தவொரு அறிவுக்கும் ஹாநிவிளைந்திடுகிறதோவென்று அதிசங்கை கொள்ளா நின்றேனென்றபடி. இவ்வறிவு ஒன்றே என்னுடைய தரிப்புக்கு ஹேதுவாதலால் இவ்வறிவும் கலங்கிற்றாகில் பிறகு தரிக்க விரகில்லையேயென்பது உள்ளுறை.

English Translation

O Lord who unleashed a terrible army on Earth in the war! O celestials' ambrosia, poison to the Asuras, dear to my soul! Then I too may doubt that you appear before devotees, -in forms that they worship, -and accept their offerings

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்