விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எடுத்தபேராளன் நந்தகோபன்தன்*   இன்உயிர்ச் சிறுவனே*  அசோதைக்கு 
    அடுத்தபேரின்பக் குலஇளம்களிறே*   அடியனேன் பெரிய அம்மானே*
    கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்*   கைஉகிர் ஆண்ட எம்கடலே,* 
    அடுத்ததுஓர் உருவாய் இன்று நீ வாராய்*  எங்ஙனம் தேறுவர் உமரே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம் கடலே - எம்போல்வார்க்குக் கடல் போன்றவனே!
இன்று - நான் விரும்புமிக்காலத்ல்
அடுத்தது ஓர் உரு ஆய் - தகுதியான வொரு உருவைக் கொண்டவனாகி
நீ வாராய் - நீ வருகின்றிலையே! (இப்படி நீ உபேக்ஷித் திருந்தாயாகில்)
உமர் - என்போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கன்

விளக்க உரை

நந்தகோபனுக்கு எடுத்தபேராளனென்று விருதுசாத்துகிறாராழ்வார், நிதியெடுத்தவனென்றபடி. எம்பெருமான் நம்மனையிலே வந்து சேரவேணுமென்கிற நினைவு கனவிலுமின்றி யிருக்கச் செய்தேனும் பரகதஸ்வீகாரமாகத் தானே வந்துநின்று ஸகலகோங்களையும் பரிபூர்ணாபெற்றிலனே“ என்று தேவகீப் பிராட்டியும் வயிறெரியும்படியாக நேர்ந்ததனால் நிதியெடுத்த மஹாநுபாவனென்கை மிகவும் பெருந்தும். பிறவியே தொடங்கி ஏழையாயிருந்தவன் திடீரென்று ஒரு நாளில் கனத்த வாழ்வு பெற்றிருக்கக் கண்டால் “இவன் நிதி கண்டெடுத்தான்“ “ம்ருதிமபரே பாரதமபரே பஜந்து பவபீதா, அஹமிஹ நந்தம் வந்தே யஸ்யாளிந்தே பரம்ப்ரஹ்ம. என்றார் ஒரு பக்க பண்டிதர், பிறவிக்கடலைக் கடக்கவேண்டி எம்பெருமானையறிவதற்காக உபநிஸ்ரீத்துக்களையும் ஸ்மிருதிகளையும் இதிஹாஸ புராணங்களையும் தஞ்சமாக அடைவார் அடைக அவையொன்றுமெனக்கு வேண்டா, யாவனொரு நந்தகோபனுடைய மனைக்கடையிலே ச்லோகத்தின் கருத்து. இதனால் நந்தகோபாலன் யெனக்குத் தஞ்சம் – என்பது இந்த ஹிதா நிதிரஸித்வம் அசேஷடம்ஸாம் லப்போஸி புண்யபுருஷை *(ஸ்ரீ வைகுண்டஸ்தவம்) என்று கூரத்தாழ்வனருளிச்செய்தபடியே ஒவ்வொருவருடைய உள்ளிலும் உறைந்து கிடைக்கச் செய்தேயும் பாக்யஹீநர்களால் வெளிக்கண்டு அநுபவிக்கப்பெறாமல் சில பரமபாக்யசாலிகளுக்கே அநுபவிக்கலாம்படியிருக்கும் எம்பெருமான் நிதியாகவே பேசத்தகுந்தவன், இந்த நிதியை நன்றாக வெடுத்து அநுபவிக்கப் பெற்றவன் நந்தகோபனேயாதலால் இவனை எடுத்த பேராளனென்றது மிகவும் பொருந்தும். அவனுடைய நந்சீவனே கண்ணுக்கு தோற்ற வொகுவடிவுகொண்டு திரிகிறதோ! என்னலாம்படி அனமந்தவனாம் கண்ணபிரான். அசோதைக்கு அடுத்த பேரின்பம் – நந்தகோபன் நிதியெடுத்த மஹாநுபாவனானாலும் அதிகமாகப் பேரின்பமநுபவித்தது யசோதைப் பிராட்டியே யாவள். * அழுகையு மஞ்சி நோக்குமந் நோக்கும் அணிகொள் செஞ்சிறுவாய் –நெளிப்பதும், தொழுகையுமிவைகண்ட வசோதை தொல்லையின்பத்திறுதி கண்டானே * (பெருமாள் திருமொழி) என்றபடி – அவளுக்கு அடுத்த பேரின்பமென்க. அடுத்த – நினைவின்றியேயிருக்க, தானேவந்து கிட்டினபத்தைச் சிற்றின்பமாக்கினால்“ என்று. அதாவது இந்நிலத்திலுண்டாகும் இன்பமெல்லாம் சிற்றின்பை மென்றும் திருநாட்டிலுண்டாகும் இன்பமொன்றே பேரின்பமென்றும் இருந்த ப்ரஸித்தியை மாற்றி விட்டான் என்றபடி. பரமபதாநுபவத்திற் காட்டிலும் பதின்மடங்கு வீறுபெற்றதாம் யசோதைக்கு ஸ்ரீக்ருஷ்ணாநுபவானந்தம். குலவிளங்களிறு – இடைக்குலவத்தில் தோன்றிய ஆணைக்கன்று, “வாரணம் பையநின்றூர்வதுபோல்“ என்றும் “வேழப்போதக மன்னவன்“ என்றும் “காய்சினமாகளிறன்னாள். என்றுமுள்ள பாசுரங்களைநினைப்பது. யானையானது மிகவும் பலிஷ்டமான பிராணியாயிருக்கச் செய்தேயும் ஒரு கட்டுத்தறியிலே கட்டுண்டிருந்து வருந்துமாபோலே ஸர்வசக்னான தான் அசத்தனைப் போலே சட்டுண்டிருந்ததற்குச் சேர குலவிளங்களிறே! என்றது. “ஆய்ச்சி உரலோடார்க்கத் தறியார்ந்த கருங்களிறே போலநின்று தடங்கண்கள் பனிமல்குந் தன்மையானை“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்குப் பொருந்தமாக நினைக்கத்தக்கது. அடியனேன் பெரியவம்மானே! இங்கு ஈடு – “உன்னை மகனென்றிருப்பார்க்கோ உதவலாவது? முறையுணர்ந்திருப்பார்க்கு உதவலாகாதோ? முறையுணர்ந்திருப்பார்க்கு உதவலாகாதோ? நான் முறையிலே நின்றவாறே நீயும் முறையிலே நில்லாநின்றாய், அடியனேனென்று நான் சொல்ல நீ ஈச்வரனாயிராநின்றாய்“ என்பதாம். இதனால், “நந்தகோபனாயும் யசோதையாயுமிருந்து இவனை நியமித்து அநுபவிக்கப் பெற்றிலோமே“ என்கிற நிர்வேதமும் ஆழ்வார்க்கு உள்ளதாகத் தோன்றும். ஒரு சிறுக்கனுக்கு உதவினாப்போலேயாகிலும் அடியேனுக்கு உதவலாகாதோ என்னுங் கருத்துப்படப் பின்னடிகளருளிச் செய்கிறார். ப்ரஹ்லாதாழ்வானுக்காக, எங்குங் கண்டறியாத விலக்ஷ்ணமாக ஒரு திருவுருவத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டுவந்து விரோதியைக் கீண்டு அருள் செய்தாய், அப்படி அடியேனுக்காகவும் ஒரு திருவுருவெடுத்து வரலாகாதோ? அன்று உதவின நீ இன்று உதவாததென்? எங்ஙனம் தேறுவர் உமரே – இதற்கு இரண்டுபடியாகப் பொருள் காண்க, பிரானே நீ வன்து தோன்ற மாட்டாயாகில் என்னைப் போன்றவர்கள் எப்படி ஜீவித்திருக்முடியும்? முடிந்துபோக வேண்டியதே. (அல்லது) ஆபத்காலங்களிலே அடியார்களுக்கு நீ உதவ்வருமவன் என்பதே என்னைப்போன்றவர்கள் எப்படி நம்பியிருக்கமுடியும் ஆபத்ஸகன், ப்ரணதார்த்திஹரன் இத்யாதி திருநாமங்களை மஹர்ஷிகளுக்குக் என்பதாக. நான் தரிக்கும்படிக்கும் உன்னிடத்தில் நான் அவிச்வாஸ் கொள்ளாதபடிக்கும் ஒருருவெடுத்து வரவேணுமென்றாராயிற்று.

English Translation

O Sweet child, dear as life to chieftain Nandagopal O Chubby elephant-calf, Yosada's joy, deep as the ocean! You tore apart the wide chest of the wicked Hiranya with your claws! Come again in your nerot form, or else, how will devotees live?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்