விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேவிமார் ஆவார் திருமகள்பூமி*   ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்* 
    மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி*  வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*
    பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்*  பவளவாய் மணியே* 
    ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த  அப்பனே!*  காணுமாறு அருளாய்   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர் - நித்யஸூரிகள்
ஆட்சி - உனது ஆளுகைக்கு உட்பட்ட பொருளோவென்னில்
மேவிய ன்று உலகம் அவை - பொருந்திய மூவுலகங்களுமாம்
நின் உருவம் - உனக்கு அஸாதாரணரூபங்களோ வென்னில்,
வேண்டு வேண்டு உருவம் - இஷ்டப்படி பரிக்ரஹிக்கிற திவ்ய வுருவங்களாம் (இப்படிகளை அடியேனுக்குக் காட்டிக்கொடுத்த வளவேயன்றிக்கே)

விளக்க உரை

பிரிவில் தரித்திருக்கவொண்ணாதபடி பரமபோக்யதை வாய்ந்திருக்கிற நீ உன்னை நான் காணும்படி. அருள்புரியவேணு மென்கிறார். இப்பாட்டில். தேவிமாராவார் திருமகள் பூமி – திருமகளும் மண்மகளும் எம்பெருமானுக்குத் தேவிமார் என்பது அனைவருமறிந்ததே, அதனை இங்கு சொல்லுவதற்கு ப்ரயோஜனம் என்னென்னில், குற்றங்களைப் பொறுப்பிந்தது, சீற்றத்தை யாற்றுவித்துப் புருஷகாரஞ செய்யக் கடமைப்பட்ட திவ்யமஹிஷிகள் அருகேயிருக்கச் செய்தேயும் நான் கிலேசப்பட வேண்டியிருக்கிறதே! இது தகுதியோவென்று காட்டுகிறபடி. ஏவ மற்றமரர் ஆட் செய்வார் – “அமரர்கள் ஆட்செய்பவர்கள்“ என்றால் போராதோ? “ஏவ“ என்றும் கூறவேணுமோ யென்னில், ஆம், கூறவேணும், ஆட்செய்தலாகிற போராதோ?எப்படி உத்தேச்யமோ, அப்படியே ஏவிக்கொள்ளுகையும் உத்தேச்ய மென்பது சரஸ்த்ரார்த்தம். * ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத * என்று இளையபெருமாள் கூறினது காண்க, ஏவிக்கொள்ள வேணுமென்றன்றோ அவர் வேண்டினது. ஏவுகிறகாலத்தில் கம்பீரமான திரு தேவனுமான சேர்த்ததில் கிட்டி நின்று அடிமை செய்வா நித்யஸூரிகள். இவர்களும் புருஷகார பூதர்களென்னுங் கருத்தானால் இங்குக் கூறப்படுகிறார்கள். * வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து * என்பவாதலால். ஆக, தேவிமாரும் நித்ய ஸூரிகளுமாகிற புருஷகார பூதர்களிருக்கவும் நான் இழக்கலாமோ? என்பது உள்ளுறை. புருஷகாரஞ் செய்யவல்லவர்கள் குறையற இருந்தாலும் காரியஞ் செய்யவேண்டியவனுக்கு ஐச்வர்யத்தில் குறையிருந்தால் பயனில்லையே, அக்குறையுமில்லை யென்கிறது மேவியவுலகம் மூன்றவையாட்சி என்பதனால், மூவுலகங்களையுங் காப்பதற்காகத் தன் விருப்பத்தின்படியே அபரிமிதமான விக்ரஹங்களைப் பரிக்ரஹிக்கவல்லவன் என்கிறது வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் என்பதனால், ரக்ஷணத்திற்கு வேண்டிய (இன்றியமையாத) உருவம் என்றாவது தன் திருவுள்ளத்திற்கு இசைந்த வுருவம் என்றாவது பொருள் காண்க. ஆக முன்னடிகளிற்சொன்ன பெருமைகளெல்லாம். பொருந்தியிருந்தும் தமக்கு இழவேயான வருத்தந்தோன்றப்பாவியேன் என்கிறார். அப்பெருமானுடைய கமலக்கண்களும் பவளவாயும் வடிவுமே தமக்குத் தாரம்மென்னுமிடம் தோற்றப்பின்னடிகள் அருளிக்செய்கிறார். அலைகடல் கடைந்தவப்பனே! காணுமாறருளாய் – உன்னை விரும்பாமல் பிரயோஜநாந்தரங்களையே விரும்புமவர்களுக்குங் காரியம் செய்யுமவனன்றோ நீ, எனக்கு, தேவர்களுக்குப்போலே கடல் கடைய வேண்டா, கமலக்கண்ணும் பவளவாயும் வடிவுமான அழகைக் காட்டினால் போதும் –என்றாராயிற்று

English Translation

Your spouses Sri and Bhu command, and all the celestials serve; the blessed three worlds are your domain, the forms you will are yours. O Gem-Lord with lotus eyes and coral lips that haunt me! O My soul's ambrosia! Lord who churned the ocean! Bless me with your vision

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்