விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி*  தெளி விசும்பு ஏறலுற்றால்,* 
    நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்*  அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,* 
    யாவரும் வந்து வணங்கும் பொழில்*  திருவாறன்விளை அதனை,* 
    மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்*  என்னும் என் சிந்தனையே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீ வினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி - பாவங்கள் நெஞ்சில் சேர்த்தியற்று ஜஹருதயம் நிர்த்தோஷமாகிஸ
தெளி விசும்பு ஏறல் உற்றல் - திருநாட்டிலே போக ப்ராப்தமானலும் (அங்குச் செல்ல விருப்பமற்று)
என் சிந்தனை - எனது நெஞ்சானது.
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும் - மநோ வாக்காயங்களினாலே பயின்று யாவரும் வந்து வணங்குமிடமா

விளக்க உரை

திருவாறமவிளையை யநுபவிக்க ப்ரதப்தமாகும்போது ஸ்ரீ வைகுண்டம் கிடைப்பதானைலும் தம்முடைய திருவுள்ளம் அதனைப் பொருள்படுத்தாகென்று கூறும் முகத்தால் இத்திருப்பதியில் தமக்குள்ள ஆதராதிசயத்தை வெளியிட்டருளுகிறார் பாவங்களெல்லாம் தொலைந்து பரமபதத்திலேறப் பெறுகையாகிற ஒரு ஸமய விசேஷம் வந்து கிட்டினைலும் என்னெஞ்சானது அதில் ருசியற்று, பரமபோக்யமான திறவாறமவிளையே கிட்டித் தொழ நேருமோ வென்று பாரியா நிற்கும் என்றராயிற்று.

English Translation

Even if my karmas vanish and I ascend Heaven, my thoughts will still be, "When will I praise and worship him?". With proper deeds and proper heart and proper words alone, O When will I go around Tiruvaranvilai

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்