விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எரிசிதறும்சரத்தால்*  இலங்கையினைத்*  தன்னுடைய- 
    வரிசிலைவாயிற்பெய்து*  வாய்க்கோட்டம்தவிர்த்துஉகந்த*
    அரையன்அமரும்மலை*  அமரரொடுகோனும்சென்று* 
    திரிசுடர்சூழும்மலை*  திருமாலிருஞ்சோலையதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிதறும் - சொரியா நின்றுள்ள
சரத்தால் - அம்புகளினால்
இலங்கையினை - ஸங்கைக்காரனான ராவணனை
தவிர்த்து - குலைத்து
வரி சிலை வாயில் பெய்து - நீண்ட வில்லின் வாயிலே புகுரச் செய்து

விளக்க உரை

இலங்கையினை என்றது- அகுபெயர் அதிலுள்ள ராவணனையும் மற்ற அரக்கர்களையும் காட்டும். “இலங்கையனை” என்றும் பாடம்; இலங்கைக்காரனை என்பது பொருள். வரி- நீளம், கோடு, நெருப்பு; வரிசிலை- நெருப்பைச் சொரிகிற வில் என்றலுமொன்று. வாய்க்கோட்டம்- என்ற -ஒரு வரையும் நான் வணங்கேன்’ என்ற ராவணனுடைய வாய்க்கோணலைச் சொல்லுகிறது; கோட்டம்- அநீதி, கோணல், இந்திரன், சந்திரன், ஸூர்யன் முதலிய தேவர்களனைவரும் வந்து பிரதக்ஷிணம் பண்ணும்படிக்கீடான பெருமையையுடைய மலை என்பது, பின்னடிகளின் கருத்து.

English Translation

With fire-spitting arrows the good King Rama silenced the fire-spitting mouth of the Lanka King Ravana and sent him into the throes of his mighty bow. He resides by his own sweet will in Malirumsolai hill where the gods and their king Indra and the wandering orbs, the Sun and Moon, circumambulate in obeisance.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்