விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்*  திருவாறன்விளை,* 
    நீள் நகரத்து உறைகின்ற பிரான்*  நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்* 
    வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய*  வெம் போர்கள் செய்து.,* 
    வாணனை ஆயிரம் தோள் துணித்தான்*  சரண் அன்றி மற்று ஒன்று இலமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலர் சோலைகள் சூழ் - பூஞ்சோலைகள் சூழ்ந்த
திருவாறன் விளை அதுவே நீள் நகரம் - திருவாறன் விளையென்கிறதலமே பரமப்ராப்யம்;
நாள் நகரத்து - (அந்த) மஹாநாகரத்தில்
உறைகின்ற பிரான் - நித்யவாஸம் பண்ணுகிற மஹோபகாரகனாய்
நெடுமால் - வியாமோஹமுவீ;யனாய்

விளக்க உரை

திருவாறன் விளையென்கிற திருப்பதியே தமக்கு ப்ராப்யமென்றும் அங்கு உறையும் எம்பெருமானே அதற்கு உபாயபூதனென்றும் தம்முடைய ஸித்தாந்தத்தை வெளியிடுகிறார் இப்பாட்டில். இத்திருப்பதியின் சுவையை யறியாதார்க்கன்றோ பரமபதம் ப்ராப்யமாவது; இதன் சுவையறிந்தார்க்குப் பரமபதம் ஒரு பொருளாகத் தோன்றுமோ? இத்தலமேயன்றே பரமபதமாவது. எம்பெருமானுக்குங்கூட ப்ராப்யபூமி இதுவான பின்பு இவ்வர்த்தத்தில் ஸம்சயமுண்டோ? விரோதிகளைப்போக்கி இத்தலத்தில் வாஸத்தை யளிப்பதற்கு உபாயபூதன் அப்பெருமானேயாவன். அன்றி மற்றொன்றிலமே என்றவிடத்து ஈடு—“இங்ஙனல்லது ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக்கடவோமல்லோம்” என்று. என்பெருமானை பராப்யனாகக் கொண்டு அவனைப் பெறுதற்கு உபாயமாக இத்திருப்பதியைக்கொள்வர் சிலர்; அது தகுதியற்றதென்று ஆழ்வார் தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிட்டருளினாராயிற்று.

English Translation

The city of Tiruvaranvilal is surrounded by gardens. He resides there as Krishna, Lord of the celestials, in the yore he entered Sana's fortress, -while Siva fled, -and cut asunder the Asura's thousand arms, he is our only refuge

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்