விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்*  தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
    அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை*  அணி நெடும் தோள் புணர்ந்தான்,* 
    என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப*  உள்ளே இருக்கின்ற பிரான்,* 
    நின்ற அணி திருவாறன்விளை என்னும்*  நீள் நகரம் அதுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று அங்கு - முன்பொரு காலத்தில்
அமர் வென்று - பூசலிலே வெற்றி பெற்று
உருப்பிணி நங்கை - ருக்மிணிப் பிராட்டியினுடைய
அணி நெடுதோள் புணர்ந்தான் - அலங்காரங்களால் பரம போக்யமான திருத்தோள்களையணைந்தவனும்
என்றும் எப்போதும் துதிப்ப என் நெஞ்சம் உள்ளே இருக்கின்ற பிரான் - ஓய்வின்றி நான் துதிக்கும்படி எனது நெஞ்சினுள்ளேயிருப்பவனுமான பெருமான்

விளக்க உரை

எம்பெருமான்பக்கலில் சாபலமுடையாரை விளித்து உங்களுடைய ஸகல துக்கங்களும் தொலையும்படி திருவாறன் விளையை நெஞ்சாலே நினையுங்கோளென்கிறார். ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவுனை—பாபங்களை நாமேபோக்கிக் கொள்வதாக முயலுமளவில் சிறிது கிடக்க்ச் சிறிது போகும்; அங்ஙனன்றிக்கே ஸர்வசக்தியான அவன் தானே போக்குகையில் வாஸநையோடே போகக்கடவதாயிற்று. ஸ்ரீ விஷ்ணுதர்மத்தில் மேருமந்தரமாத்ரோபி ராசி: பாபஸ்ய கர்மண கேசவம் வைத்யமாஸாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி. என்று கூறினது இங்கே அநுஸந்தேயம். அமர்வென்று உருப்பிணிநங்கை யணிநெடுந்தோள் புணர்ந்த வரலாறு வருமாறு;-விதர்ப்பதேசத்தில் குண்டினமென்கிற பட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு ருக்மன் முதலிய ஜந்து பிள்ளைகளும் ருக்மிணி யென்கிற ஒரு பெண்ணுமிருந்தனர். அந்த ருக்மிணியானவள் ஸாக்ஷித் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம். அவளுக்கு யுக்தவயது வந்தவுடனே கண்ணபிரான் அங்குச் சென்று இப்பெண்ணை எனக்குத் தாரைவார்த்துக் கொடுங்களென்று கேட்க, ருக்மனென்பவன் அவளைச் கிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணணுக்குக் கொடுக்கலாகாதென்று தகைந்துவிட்டு, சிலநாள் கழிந்தபின் அந்த ருக்மிணியின் கலியாணத்திற்காக ஸ்வயம்வரம் கோடித்து ஸகலதேசத்தரசர்களையுல் வரவழைத்திட்டனன். இதனிடையில் ருக்மிணி “அன்றிப் பின் மற்றொருவற் கென்னைப் பேசலொட்டேள் மாலிருஞ்சோலையெம்மாய்ற்கல்லால்” என்ற துணிவையுடையளாகையால் தன்னை எவ்வகையினுலாகிலும் மணந்து செல்லும்படி கண்ணபிரானிடத்து ஓரந்தணனைத் தூதுவிட்டிருந்தாள். கண்ணபிரானும் அங்ஙனமே பலராமன் முதலியோரைக் கூட்டிக்கொண்டு அப்பட்டணத்திற் கெழுந்தருளிக் கல்யாண முஹீர்த்தினத்திற்கு முதனாள் அந்த ருக்மிணியைத்தான் ப்ரகாசமாக வெடுத்துத் தேரிலேற்றிக்கொண்டு ஊர்நோக்கிப் புறப்படப்புக, சிசுபாலன் முதலிய சில அரசர்கள் கண்ணனை யெதிர்த்துப் போர் செய்யமுயல, பலராமனும் தானுமாக அவர்களை வலியடக்கி வென்று ஓட்டிவிட, பின்பு (ருக்மிணியின் தமையனான) ருக்மன் மிகவும் வெகுண்டு ஆக்ரஹப்பட்டுக் கண்ணனை முடிப்பதாக ஓங்கிவர, அவனைக் கண்ணபிரான் ருக்மிணியின் பிரார்த்தனையின்படி உயிர்க்கொலை செய்யாமல் அவனது மீசையையும் குடுமியையும் சிரைத்துப் பங்கப்படுத்தினன். சேலேந பத்த்வா தமஸாதுகாரிணம் ஸச்மச்ருகேசம் ப்ரவபந் ச்யரூபயத் என்பது ஸ்ரீபாகவதம். இங்ஙனே விரோதிகளைத் தொலைத்துப்பிறகு ருக்மிணிப்பிராட்டியைத் திருமணம் புணர்ந்தானாயிற்று.

English Translation

Devotees if we contemplate his frame, our karmas will vanish. He is within me at all times, praised by my heart. He then fought and won battles to wed his Rukmini. He resides in Tiruvaranvilai, the city of great fame

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்