விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூடும் கொல் வைகலும்*  கோவிந்தனை மதுசூதனை கோளரியை,* 
    ஆடும் பறவைமிசைக் கண்டு*  கைதொழுது அன்றி அவன் உறையும்,*
    பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி*  ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,* 
    நீடு பொழில் திருவாறன்விளை தொழ*  வாய்க்கும்கொல் நிச்சலுமே!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வைகலும் கூடும் கொல் - (நமது மநொரதம்) எப்போதும் நிறைவேறப்பெறுமோ?
கோவிந்தனை - ஆயர்தலைவனும்
மதுசூதனை - மதுகைடபஹந்தாவும்
ஆடு பறவை மிசை கண்டு - வெற்றியையுடைய கருடன் மேலே கண்டு
கைதொழுது - அஞ்ஜலிபண்ணி அவ்வளவேயல்லாமல்

விளக்க உரை

பாட்டின் முடிவிலே “வாய்க்குங்கொல் நிச்சலும்” என்றிருக்கச் செய்தேயும் தொடக்கத்தில் “கூடுங்கொல் வைகலும்” என்றது ஆதராதிகசயத்கையும் விரைவுமிகுதியையுங் காட்டும். அங்குறையும் பெருமான்பக்கலிலே விளங்கும் ஆச்ரிதவாத்ஸல்யத்தைக் கண்டு கோவிந்தனை என்றார்; விரோதிநிரஸனமிடுக்கைக் கண்டு ‘மதுசூதனைக் கோளரியை’ என்றார். “ஆடும் பறவை மிசைக்கண்டு” என்ற சொல்நயத்தை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்யும் விசேஷார்த்தம்-திருவாறன்விளையை உத்தேச்யமாகக் கொண்டு எம்பெருமானை அங்கே காணவேணுமென்று நாம் அவ்விடந்தேடிச் சென்றால், அவன் திருநகரியை உத்தேச்யமாகக்கோண்டு இங்கே நம்மைக் காணவேணுமென்று ஆடும் பறவைமிசையேறி வருவனே; அன்னவனை நடுவழியிலே கண்டு—என்று. கைதொழுதன்றி—கைதொழுவது மாத்திரமேயல்லாமல் என்றபடி வேதாத்யயந பரர்களும் பஞ்சமஹாயஜ்ஞபராயணர்களும் வாழுமிடமென்கிறது மூன்றமடி.

English Translation

Oh, when will worship him instead of seeing him ride away on his Garuda? He is Govinda, Madhusudana, Naraharl, residing in Tiruvaranvilai, -surrounded by gardens, -famed for the four Vedas, the five sacrifices and the six Angas

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்