விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இங்கும் அங்கும்*  திருமால் அன்றி இன்மை கண்டு,* 
    அங்ஙனே வண் குருகூர்ச்*  சடகோபன்,* 
    இங்ஙனே சொன்ன*  ஓர் ஆயிரத்து இப்பத்தும்,* 
    எங்ஙனே சொல்லினும்*  இன்பம் பயக்குமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அங்ஙனெ வண் குரு கூர் சட கோபன் - அவ்வண்ணமாகவே யிருப்பவரான ஆழ்வார்
இங்ஙனே சொன்ன - இப்படியருளிச் செய்த
ஒர் ஆயிரத்து இப்பத்தும் - ஆயிரத்துள் இப்பதிகம்
எங்ஙனே சொல்லிலும் - எப்படிச்  சொன்னாலும்
இன்பம் பயக்கும் - ஆனந்தாவஹமாகும்.

விளக்க உரை

 ‘இந்த உலகத்திலும் அந்த உலகமாகிய பரமபதத்திலும் திருமாலை அல்லாமல் இல்லாத தன்மையைப் பார்த்து, அந்தத் தன்மையையுடையராய் வண்மை பொருந்திய திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபராலே இந்த வகையாலே அருளிச்செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் எந்த வகையில் சொன்னாலும் இன்பத்தைக் கொடுக்கும்,’ என்றபடி.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்