விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம்*  திருமாலின் சீர்,* 
    இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனோ,* 
    மறப்பு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 
    உறப் பல இன்கவி*  சொன்ன உதவிக்கே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறப்பு இலா என்னை - மறப்புக்கு விஷயமில்லாதபடி ஸ்மரணமேயில்லாதிருந்த வென்னை
தன் ஆக்கி - தன்னோடொக்க வீஷயீகரித்து
என்னால் தன்னை உறபல இன்க சொன்ன உதவிக்கு - என்னைக்கொண்டு தனக்குப் பொருத்தமாகப் பல இனிய பாசுரங்களைப் பாடுவித்த மஹோபகாரத்திற்கு,
திறத்துக்கு ஏய் துப்பரவு ஆம் திருமாலின் சீர் - எந்த விஷயத்திலும் பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை
இறப்பு எதிர் காலம் - இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு

விளக்க உரை

மறப்பு இல்லாதவனான என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னைப் பொருந்தும்படி பல கவிகளைக் கூறிய உபகாரத்துக்கு எல்லா வகையாலும் வலியோனான திருமாலினுடைய கல்யாணகுணங்களை மூன்று காலங்களிலும் அனுபவித்தாலும் நிறைவு பெற்றவன் ஆகேன்,’ என்றவாறு.

English Translation

Even if I drink through past and future, will that quench my thirst for singing his glory? He favoured me by making this mindless me his, and with my tongue he song his moving songs

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்