விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆர்வனோ ஆழிஅங்கை*  எம் பிரான் புகழ்,* 
    பார் விண் நீர் முற்றும்*  கலந்து பருகிலும்,* 
    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைச்,* 
    சீர்பெற இன்கவி*  சொன்ன திறத்துக்கே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏர்வு இலா என்னை தன் ஆக்கி என்னுல் - தகுதியற்ற வென்னைத் தன்னேடொக்கவருள் செய்து
தன்னை சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கு - என்னையிட்டுத் தன் விஷயத்தில் சிறப்புண்டாம்படி இனிய பாசுரங்களைச் சொன்னபடிக்கு
ஆழி அம் கை எம்பிரான் புகழ் - சக்ரபாணியான அந்த எம்பெருமானுடைய திருப்புகழை
பார்விண் நீர் முற்றும் கலந்து பருகினும் ஆர்வனே - மண்ணிலுள்ளாரும் கூறிராப்தியிலுள்ளாரும் ஒன்று சேர்ந்து புகழ நேர்ந்தாலும் நான் திருப்தியடைவேனே?

விளக்க உரை

தகுதி இல்லாத என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னைச் சிறப்புப்பெற இனிய கவிகளைச் சொன்ன பிரகாரத்திற்கு, சக்கரத்தைத் தரித்த எம்பிரானுடைய கல்யாண குணங்களை, பூமியிலுள்ளார் ஆகாயத்திலுள்ளார் தண்ணீரிலுள்ளார் ஆகிய எல்லாரோடும் கலந்து அனுபவித்தாலும் நிறைவு பெற்றவன் ஆவேனோ?’ என்கிறார்.

English Translation

The Lord of discus made me his, gave me excellence, and sang his sweet songs. Even if I mix and drink the whole Earth, will if quench my thirst for singing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்