விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வைகுந்த நாதன்*  என வல்வினை மாய்ந்து அறச்,* 
    செய் குந்தன் தன்னை*  என் ஆக்கி என்னால் தன்னை,* 
    வைகுந்தன் ஆகப்*  புகழ வண் தீம்கவி,* 
    செய் குந்தன் தன்னை*  எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குந்தன் - பரிசுத்தி பெற்றவனாய்
தன்னை என் ஆன்கி - என்னேடு ஒரு நீராகக்கலந்து
என்னுல் தன்னை வைகுந்தன் ஆக புகழ - என்னைக்கொண்டு தன்னை வைகுண்ட பதியாகப் புகமும்படி
வண் தீம் கவி - உதாரமதுரங்களான பாசுரங்களை
செய் குந்தன் தன்னை - செய்யும்படியான உபசாரஸ்வபாவமுடைய தன்னை

விளக்க உரை

ஸ்ரீ வைகுண்டத்திலே எழுந்தருளியிருப்பவனும், என்னுடைய வலிய கொடிய வினைகள் எல்லாம் அழிந்து அற்றுப் போகும்படியாகச் செய்கின்ற தூயோனும், என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னை வைகுந்தநாதனாகப் புகழ் வளவிய இனிய கவிகளைச் செய்யும் குந்தன் என்னும் திருநாமத்தையுடையவனுமான எம்பெருமானை எத்தனை நாள் சிந்தித்தாலும் மனம் நிறைவு உண்டாகுமோ?

English Translation

When shall I know to my fill the Lord who destroyed my karmas? He made me his andthrough my words has sung his own songs on Vaikunta

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்