விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன் கவி பாடும்*  பரம் கவிகளால்,* 
    தன் கவி தான் தன்னைப்*  பாடுவியாது இன்று* 
    நன்கு வந்து என்னுடன் ஆக்கி*  என்னால் தன்னை,* 
    வன் கவி பாடும்*  என் வைகுந்த நாதனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் வைகுந்த நாதன் - பரமபதநாதனை எம்பெருமான்
இன் கவி பாடும் பரம கவிகளால் - மதுரமான கவிகளைப்பாடவல்ல முதலாழ்வார்களைக் கொண்டு
தன் கவி தான் தன்னை பாடுவியாது - தனக்குத் தகுதியான பாசுரங்களைத்தான் பாடுவித்துக்கொள்ளாமல்
இன்று நன்கு வந்து என் உடன் ஆக்கி - இப்போது எனக்கருள் செய்யவேணுமென்று வந்து என்னைக் கருவியாகக்கொண்டு
என்னுல் - என் வாயிலாக

விளக்க உரை

‘இனிய கவிகளைப் பாடுகிற உயர்ந்த புலவர்களால் தனக்குத் தகுதியான கவிகளைத் தான் தன்னைப் பாடுவித்துக் கொள்ளாமல். என் வைகுந்தநாதன், இன்று வந்து, என்னைத் தன்னோடு ஒத்தவன் ஆக்கி, என்னால் தன்னைச் சொற்செறிவு பொருட்செறிவுள்ள கவிகளை நன்றாகப் பாடாநின்றான்,’ என்கிறார்.

English Translation

My Lord of Vaikunta has preferred to blend with me and sing his praise. He did not choose worthy poets of great words and merit for this

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்