விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீர் கண்டுகொண்டு*  திருந்து நல் இன்கவி,* 
    நேர்பட யான் சொல்லும்*  நீர்மை இலாமையில்,* 
    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைப்,* 
    பார் பரவு இன்கவி* பாடும் பரமரே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருந்து நல்இன் கவி -திருத்தமுற்று விலக்ஷ்ணமாய் மதுரமான பாசுரங்களை
யான் நேர்படசொல்லும் நீர்மை இலாமையில் - நேர்த்தியாகப் பாடுகைக்குரிய சக்தி எனக்கில்லாமையாலே
ஏர்வு இலா என்னை தன்னாக்கி - தகுதியற்ற வென்னைத் தன்னோடொக்கக் கடாக்ஷித்து
என்னால் - அப்படி கடாக்ஷிக்கப் பெற்ற அடியேனைக் கொண்டு
தன்னை - தன் விஷயமாக

விளக்க உரை

தன்னுடைய கல்யாண குணங்களைக் கண்டு கொண்டு. திருந்திய நல்ல இனிய கவிகளைத் தகுதியாக யான் சொல்லும் ஞானம். எனக்கு இல்லாமையினால், தகுதி இல்லாத என்னைத் தன் பக்கலிலே பத்தியுடையேனாம்படி செய்து. என்னால் தன்னைப் பூவுலகமெல்லாம் துதிக்கத் தக்க கவிகளைப் பாடுகின்ற பரமன் ஆவான்,’ என்கிறார்.

English Translation

He made me his and through me, song sweet songs that the worlds praise. I only uttered empty words, while he filled them with meaning

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்