விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆம் முதல்வன் இவன் என்று*  தன் தேற்றி,* என் 
    நா முதல் வந்து புகுந்து*  நல் இன் கவி,* 
    தூ முதல் பத்தர்க்குத்*  தான் தன்னைச் சொன்ன,*  என் 
    வாய் முதல் அப்பனை*  என்று மறப்பனோ? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் தேற்றி - தன் விஷயமான தெளிவை எனக்குப் பிறப்பித்து
என் நா முதல் வந்து புகுந்து - என்னுடைய நாவிலே தானே வந்து புகுந்து
நல் இன் கவி - பரம போக்யமான சொல் தொடைகளை
தூ முதல் பத்தர்க்கு - முமுக்ஷூக்களுக்கு அநுபவிக்கலாம்படி
தான் தன்னை சொன்ன - தானே தன்னைப் பாடின

விளக்க உரை

‘கவி பாடுகைக்கு முதல்வன் ஆவான் இவன் என்று தன்னை நான் தெளியும்படி செய்து, முதலிலே என் நாவிலே வந்து புகுந்து நல்ல இனிய கவிகளை. முதன்மை பெற்ற பரிசுத்தரான அடியார்கட்குத் தானே தன்னைச் சொன்ன என் வாக்கிற்குக் காரணனான அப்பனை இனி ஒருநாளும் மறக்க உபாயம் இல்லை,’ என்றபடி.

English Translation

He entered my speech and made me acknowledge him. He sings his own songs of praise through the words of pure-hearted devotees. How can I forget the first-cause Lord in my speech?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்