விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இல்லை நுணுக்கங்களே*  இதனில் பிறிது என்னும் வண்ணம்* 
    தொல்லை நல் நூலில் சொன்ன*  உருவும் அருவும் நீயே:* 
    அல்லித் துழாய் அலங்கல்*  அணி மார்ப என் அச்சுதனே,* 
    வல்லது ஓர் வண்ணம் சொன்னால்*  அதுவே உனக்கு ஆம்வண்ணமே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இதனில் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் - இதிற்காட்டில் வேறு நுட்பமில்லை யென்னும்படி
தொல்லை நல்நூலில் சொன்ன - அநாதியான வேதசாஸ்த்ரத்திலே சொல்லப்பட்ட
உருவும் அருவும் நீயே - அசித்தும் சித்தும் நீயே;
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே - பூந்தாரையுடைத்தான திருத்துழாய் மாலை யணிந்த திருமார்பையுடைய என் அச்சுதனே!
வல்லது ஒர் வண்ணம் சொன்னால் - கூடுமானவரையில் (யார் எது) சொன்னாலும்

விளக்க உரை

இதனைக்காட்டிலும் வேறு நுணுக்கங்கள் இல்லை,’ என்னும் வண்ணம் பழையதான சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட அசித்தும் சித்தும் நீயே; அகவிதழையுடைய திருததுழாய் மாலையை அணிந்த திருமார்பினையுடையவனே! என் அச்சுதனே! வல்லது ஒரு வண்ணம் சொன்னால் உனக்கு ஆம் வண்ணம் அதுவேயாம்.

English Translation

You are the form and the formless spoken of in the Vedas, the subtle inseparable from the gross reality. O My Achyuta with a Tulasi garland over your chest! Whatever one attributes to you, that you are indeed!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்