விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துயரங்கள் செய்யும் கண்ணா!*  சுடர் நீள் முடியாய் அருளாய்,*
    துயரம் செய் மானங்கள் ஆய்*  மதன் ஆகி உகவைகள் ஆய்,* 
    துயரம் செய் காமங்கள் ஆய்*  துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,* 
    துயரங்கள் செய்துவைத்தி*  இவை என்ன சுண்டாயங்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுடர் நீள் முடியாய் - ஒளிமிக்கு ஓங்கின திருவபிஷேகத்தை யுடையவனே!
துயரம் செய் - துக்கத்தை விளைக்கிற
மானங்கள் ஆய் - பலவகைப்பட்ட துரபிமானங்களாய்
மதன் ஆகி - செருக்குமாய்
உகவைகள் ஆய் - ப்ரீதிகளுமாய்

விளக்க உரை

துன்பங்களைச் செய்கின்ற கண்ணனே! பிரகாசம் பொருந்திய நீண்ட திருமுடியையுடையவனே! துன்பங்களைச் செய்கிற சாதி முதலானவை பற்றி வருகின்ற மானங்களாகியும், செருக்காகியும், மகிழ்ச்சிகளாகியும், துன்பங்களைச் செய்கின்ற காமங்களாகியும், அளவாகியும், நிற்றலாகியும், நடத்தலாகியும் துன்பங்களைச் செய்து வைத்தாய்; இவை என்ன சுயநலக்காரிங்கள்? அருளிச்செய்ய வேண்டும்.

English Translation

O Hardships! My Krishna, Lord with a tall crown! Tell me, The afflicting pride, insolence and love, the afflicting desires, the heavy, the still, the moving, -you made these and caused me grief, -what games are these?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்