விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மயக்கா! வாமனனே!*  மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,* 
    அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய்*  அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்,* 
    வியப்பு ஆய் வென்றிகள் ஆய்*  வினை ஆய் பயன் ஆய் பின்னும்நீ,* 
    துயக்கு ஆய் நீ நின்றவாறு*  இவை என்ன துயரங்களே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துயர்ப்பு தேற்றமும் ஆய் - மறப்பும் தெளிவும் நீயிட்ட வழக்காய்
அழல் குளிர் ஆய் - தாபமும் குளிர்ச்சியும் நீயிட்டவழக்காய்
வியவு வியப்பு ஆய் - விஸ்மயநீயமும் விஸ்மயமும் நீயிட்ட வழக்காய்
வென்றிகள் ஆய் - (உலகில் விஜய ஸித்திகளும் நீயிட்ட வழக்காய்
வினை பயன் ஆய் - புண்ய பாபரூப கருமங்களும் அவற்றின் பலன்களும் நீயிட்ட வழக்காய்

விளக்க உரை

மயக்குகின்றவனே! வாமனனே! நான் தெளியும்படி ஒன்று அருளிச்செய்ய வேண்டும்; மறப்பு ஆகித் தெளிவு ஆகி வெப்பமாகிக் குளிர்ச்சியாகி ஆச்சரியமாகி ஆச்சரியப்படத்தக்க பொருள்களுமாகி வெற்றிகளுமாகி இரு வினைகளாகி இருவினைப் பயன்களுமாகி அதற்கு மேலே உன்னை அடைந்த அடியவர்களும் மதி மயங்கும்படி நீ செய்துகொண்டு நின்ற விதம் எங்களுக்குத் துக்கத்தைத் தருகின்றனவாய் இராநின்றன, ‘என்றவாறு.

English Translation

O Deceiving Manikin! Pray tell me, that I may understand ignorance and knowledge, heat and cold, wonders and trivia, victory and despair, use and wastefulness are you; what travails are these?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்