விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள் அவிழ் தாமரைக்கண்*  கண்ணனே! எனக்கு ஒன்று அருளாய்,* 
    உள்ளதும் இல்லதும் ஆய்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*
    வெள்ளத் தடம் கடலுள்*  விட நாகு அணைமேல் மருவி,* 
    உள்ளப் பல் யோகு செய்தி*  இவை என்ன உபாயங்களே!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கள் அவிழ் தாமரை கண் கண்ணனே - மதுவொழுகுகின்ற கண்களையுடைய கண்ணபிரானே!
எனக்கு ஒன்று அருளாய் - அடியேனுக்கு இவ்விஷயமொன்று அருளிச்செய்ய வேணும்;
உள்ளதும் இல்லதும் ஆய் உலப்பு இல்லன ஆய் விய ஆய் - நித்யமாகையாலே உள்ளதுமாய் வேறு அவஸ்தையையடைகையாலே இல்லாததுமான எண்ணிறந்தவையுமான வேறு வேறு வகைப்பட்ட சேதநாசேதநப் பொருள்களுக்கு நிர்வாஹகனாய்
வெள்ளம் தட கடலுள் - விசாலமான திருப்பாற்கடல் வெள்ளத்திலே

விளக்க உரை

‘தேனோடு மலர்கின்ற தாமரை போன்ற திருக்கண்களையுடைய கண்ணனே! அழிதல் இல்லாததாய் இருக்கின்ற சித்து ஆகியும், அதினின்றும் வேறுபட்டதாய் இருக்கின்ற அழிந்துபோகின்ற அசித்தாகியும், திருப்பாற்கடலில் விஷம் பொருந்திய ஆதிசேஷ சயனத்தின்மேல் பொருந்தித் திருவுள்ளத்தில் பல விதமான காக்கும் உபாயங்களைச் சிந்தனை செய்கிறாய்; இவை என்ன விரகுகள் தாம்! எனக்கு ஒன்று அருளிச்செய்யவேண்டும்,’ என்கிறார். 

English Translation

Honey-dripping-lotus-eyed-Lord! Pray give me an answer. You lie in the deep ocean on a hooded snake, and will these many things, being and non-being, permanent and impermanent, what designs are these?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்