விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சித்திரத் தேர் வலவா!*  திருச் சக்கரத்தாய்! அருளாய்,* 
    எத்தனை ஓர் உகமும்*  அவை ஆய் அவற்றுள் இயலும்,* 
    ஒத்த ஓண் பல் பொருள்கள்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,* 
    வித்தகத்தாய் நிற்றி நீ*  இவை என்ன விடமங்களே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சித்திரம் - விசித்திரமாகத் தேரை நடத்த வல்லவனே!
தேர் வலவா திரு சக்கரத் தாய் - திருவாழிப்படையை யடையவனே!
அருளாய் - நீயருளிச் செய்ய வேணும்;
எத்தனை ஓர் உகமும் அவை ஆய் - க்ருதம் முதலான யுகங்களுக் கெல்லாம் நிர்வாஹனாகய்
அவற்றுள் இயலும் - அந்த காலங்களுக்குள்ளே நடப்பதாய்

விளக்க உரை

அழகிய தேரை நடத்தியவனே! அழகிய சக்கரத்தையுடையவனே! யுகங்கள் அவையுமாகி, அவற்றுள் நடக்கின்ற ஒத்தனவாயும் ஒள்ளியவாயும் எல்லையில்லாதனவாயும் இருக்கின்றவாகிய பல பொருள்களாகியும் அவற்றின் வேறுபாடுகளாகியும் ஆச்சிரயப்படத்தக்கவனாய் நீ நிற்கின்றாய்; இவை என்ன வேறுபாடுகள்! அருளிச்செய்ய வேண்டும்,’ என்கிறார்.

English Translation

Beautiful discus Lord Deft Charioteer! Pray speak; the many countless eyes, -and moving within them, the countless myriad objects, transient or not, -wondrously you stand as these, what mischief's are these?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்