விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயா! வாமனனே!*  மதுசூதா நீ அருளாய்,* 
    தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்*  விசும்பு ஆய் கால் ஆய்,* 
    தாயாய்  தந்தையாய்*  மக்களாய்  மற்றுமாய் முற்றுமாய்,* 
    நீயாய்  நீ நின்றவாறு*  இவை என்ன நியாயங்களே! (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயா - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வாமனனே - வாமநாவதாரஞ் செய்தவனே!
மதுசூதா - மதுகைடபர்களைத் தொலைத்தவனே!
நீ அருளாய் - உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்;
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய் - பஞ்ச பூதங்களுமாய்

விளக்க உரை

மாயவனே! வாமனனே! மதுசூதனனே! தீயாகி நீராகி நிலனாகி ஆகாசமாகிக் காற்றாகித் தாயாகித் தந்தையாகி மக்களாகி மற்றைய உறவினர்களாகி மேலும் சொல்லப்படாத பொருள்களுமாகி உனது உருவுமாகி நீ நின்றபடிகள் தாம் இவை என்ன படிகள்?

English Translation

O wondrous Lord, Vamana!, Madhusudana! Tell me. You stand as Earth, Fire, Water, Sky and Wind, then as Mother, Father, Children and relatives, as all else, and as you; what do these mean?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்