விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பலபலநாழம்சொல்லிப்*  பழித்தசிசுபாலன்தன்னை* 
  அலைவலைமை தவிர்த்த*  அழகன்அலங்காரன்மலை*
  குலமலைகோலமலை*  குளிர்மாமலைகொற்றமலை* 
  நிலமலைநீண்டமலை*  திருமாலிருஞ்சோலையதே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பலபல நாழம் - பலபல குற்றங்களை
சொல்லி - சொல்லி
பழித்த - தூஷித்த
சிசுபாலன் தன்னை - சிசுபாலனுடைய
அலவலைமை - அற்பத்தனத்தை

விளக்க உரை

கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையுஞ், கேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்” என்றபடி- காதுகொண்டு கேட்க முடியாதபடி தூஷித்துக் கொண்டிருந்த சிசுபாலனுக்குச் சரமதசையில் கண்ணபிரான் தன் அழகைக் காட்டித் தன்னளவில் பகையை மாற்றியருளினமை, முன்னடிகளிற் போதகரும், நாழம் என்பதில், அம்- சாரியை, நாழ் என்ற சொல் குற்றமென்னம் பொருளாதலை 1. “நாமா மிகவுடையோம் நாழ்” 2. “நாழமவர் முயன்ற வல்லாக்கான்” என அவ்விடத்து உரைப்பர் அப்பிள்ளை. 3. “அஃதே கொண்டன்னை நாழிவளோ வென்னும்” என்ற விடாமுங் காண்க.அவ்வலைமை - கண்ணன் என்றால் பொறாது நிந்திக்கும்படியான அற்பத்தனம். (கொற்றமலை.) தன் அபிமாகத்தில் அகப்பட்டவர்களை ஸம்ஸாரம் மேலிடாதபடி நோக்கும் வெற்றியை யுடைத்தானமலை என்றபடி. கொற்றம்- அதிசயம் (நோக்கும். வெற்றியை யுடையத்தானமலை என்றபடி. கொற்றம்- அதிசயம் (நிலமலை.) மணிப்பாறையாயிருக்குமளவன்றியே, நல்ல பழங்கள் புஷ்பங்கள் தரவல்ல மரங்கள் முளைப்பதற்குப் பாங்கான செழிப்பையுடைய நிலங்களமைத்தமலை யென்க (நீண்டமலை.) பரமபதத்திற்கும் ஸம்ஸாரத்திற்கும் இடைவெளி யற்று உயர்ந்துள்ளது.

English Translation

The beautiful Lord showed his beatific form and silenced the capricious Sisupala who went about heaping abuse and blame on him. His hill abode is the tutelary hill, the beautiful hill, the cool hill, the victory hill, the firm hill, to tall hill, the Malirumsolai hill.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்