விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கட்கு அரிய பிரமன் சிவன்*  இந்திரன் என்று இவர்க்கும்,* 
    கட்கு அரிய கண்ணனைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
    உட்கு உடை ஆயிரத்துள்*  இவையும் ஒரு பத்தும் வல்லார்,* 
    உட்கு உடை வானவரோடு*  உடனாய் என்றும் மாயாரே. (2)        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கட்கும் அரிய - கண்ணுக்கும் காணவர்யனான
கண்ணனை - எம்பெருமானைக் குறித்து
குருகூர்சட கோபன் சொன்ன - நம்மாழ்வார் அருளிச்செய்த
உட்கு உடை ஆயிரத்துள் - எம்பெருமானை உள்ளபடி பேசும் வல்லமை வாய்ந்த ஆயிரத்தினுள்ளே
இவையும் ஒரு பத்தும் வல்லார் - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்

விளக்க உரை

 மக்கள் கண்களால் காண அரிய பிரமன் என்ன, சிவன் என்ன, இந்திரன் என்ன, ஆகிய இவர்கட்கும் காண அரிய கண்ணபிரானைத் திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த மிடுக்கையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள், ஆற்றலையுடையவாரன நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் எப்பொழுதும் பேரின்பத்தை அனுபவிக்கப் பெறுவர்கள்.

English Translation

This decad of the powerful thousand songs. By kurugur Satakopan on Krishna who is hard to see for even the celestials, -those who master it will secure the world of the celestials forever

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்