விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோள்இழைத் தாமரையும்*  கொடியும் பவளமும் வில்லும்,.* 
    கோள்இழைத் தண் முத்தமும்*  தளிரும் குளிர்வான் பிறையும்,*
    கோள்இழையாஉடைய*  கொழும்சோதி வட்டம்கொல் கண்ணன், 
    கோள்இழை வாள் முகமாய்*  கொடியேன் உயிர் கொள்கின்றதே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொடியும் - கற்பகக் கொடியும் (திருமூக்கும்)
பவளமும் - பவளமும் (திருவதரமும்)
வில்லும் - வில்லும் (திருப்புருவங்களும்)
கோள் இழைதண்முத்தமும் - தன்னுடைய தேஜஸஸையே தனக்கு ஆபரணமாகவுடைத்தும் (தந்தபங்க்தியும்)
தளிரும் - தளிரும் (திருக்காதும்)

விளக்க உரை

தன் ஒளியையே தனக்கு ஆபரணமாகவுடைய தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் தன் ஒளியையே தனக்கு ஆபரணமாகவுடைய குளிரந்த முத்தமும் தளிரும் குளிர்ந்த பெரிய எட்டாம் பிறையுமாகிய இவற்றையெல்லாம் தன்னகத்தேயுடைய, கொள்ளப்பட்ட ஆபரணத்தையுடைய சோதி மண்டலமோ? கண்ணபிரானுடைய, தன்னழகே தனக்கு ஆபரணமாய் ஒளியையுடைத்தான முகமாய்க்கொண்டு கொடியேனுடைய உயிரைக் கொள்ளை கொள்ளுகின்றது.

English Translation

The beautiful face of Krishna has taken my soul! His lotus eyes, tendril nose, coral lips, bow-like eyebrows, pearly teeth, ornamented ears and crescent-marked forehead stand like a radiant orb of brilliance

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்