விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காண்மின்கள் அன்னையர்காள்*! என்று காட்டும் வகைஅறியேன்,* 
    நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சுஇலைகொல்,*
    சேண்மன்னு நால்தடம்தோள்*  பெருமான்தன் திருநுதலே?,* 
    கோள்மன்னி ஆவிஅடும்* கொடியேன் உயிர் கோள்இழைத்தே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னையர் காள காண்மின்கள் என்று - தாய்மார்களே! காணுங்கோள் என்று சொல்லி
காட்டும் வகை அறியேன் - (உங்களுக்குக்) காட்டும் வித மறிகின்றிலேன்;
நாள் மன்னு வெண் திங்கள் கொல் - பூர்வ பக்ஷ்த்து அஷ்டமீசந்திரனோ!
நயந்தார் கட்கு நஞ்சு இலை கொல் - ஆசைப்பட்டவர்களுக்கு நஞ்சாயிருப்பதொரு இல்லையோ!
சண் மன்னுநால் தட தோள் பெருமான் தன் - உயர்த்தி பொருந்திய நான்கு பருத்த திருத்தோள்களையுடைய எம்பெருமானது

விளக்க உரை

உரை:1

‘தாய்மார்களே! பாருங்கோள் என்று காட்டுகின்ற தன்மையை அறியேன்; நீட்சி பொருந்திய வலிய நான்கு திருத்தோள்களையுடைய கண்ணபிரானது அழகிய நெற்றியானது, எட்டாம் நாள் பிறைதானோ? அன்றி, விரும்பினவர்கட்கு நஞ்சு வடிவாக இருப்பது ஒரு இலைதானோ? அறியேன்; கொடியேனாகிய என்னுடைய உயிரைக் கொள்ளுவதற்கு நினைத்து வலியோடு என் உயிரை வருத்துகின்றது,’ என்கிறாள்.

உரை:2

எம்பெருமானின் நெற்றி அழகும் நான்கு தோள்களின் தோற்றமும் என்னைத் துன்புறுத்துகின்றன. அன்னையர்களே! உங்களிடம் இதை விவரிக்கும் வகை அறியேன். அவன் திருமுகம் அஷ்டமிச் சந்திரன் போல உள்ளது. அல்லது நஞ்சுவடிவில் உள்ள ஓர் இலையோ! அது கொடியோன் ஆவியைக் கொள்ளை இட்டு வருத்துகிறது ]. இதில் அஷ்டமித் திங்கள் என்று ஆழ்வார் ஏன் சொன்னார் என்றல், கண்ணன் அஷ்டமியில் தோன்றியவன். நயமாகத் தன் தாயிடம் அவனைச் சுட்டிக்காட்ட தலைவி கூறும் வார்த்தையாக இதைக் கருதலாம். ஆழ்வார்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

English Translation

Ladies, I know not how to show you this, but see! is it the waxing crescent moon? Alas, is there no poison for lovers? The forehead of my Lord with four arms afflicts my soul and kills me relentlessly

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்