விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உய்விடம் ஏழையர்க்கும்*  அசுரர்க்கும் அரக்கர்கட்கும்* 
    எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்,*
    பைவிடப் பாம்புஅணையான்*  திருக்குண்டலக் காதுகளே?* 
    கைவிடல் ஒன்றும்இன்றி*  அடுகின்றன காண்மின்களே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பை விடம் பாம்பு அணையான் - படமெடுப்பதும் விஷத்தைக்குவதுமான பாம்பைக் படுக்கை யாகவுடைய பெருமானுடைய
திரு குண்டலம் - திருமகர குண்டலங்களை யுடைய காதுகள் தானே
கைவிடல் ஒன்றும் இன்றி - ஒய்வில்லாமல் நிரந்தரமாக
அடுகின்றன - நலியாநின்றன;
காண்மின்கள் - காணுகோள்.

விளக்க உரை

‘பெண்களுக்கும் அசுரர்களுக்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எங்கே?’ என்றுகொண்டு விளங்கி மகரத்தின் வடிவாகத் தழைக்கின்ற தளிர்கள்தாமோ படத்தையுடைய விஷம் பொருந்திய பாம்பைப் படுக்கையாகவுடைய எம்பெருமானது குண்டலங்கள் தரித்த காதுகள்? சிறிதும் விட்டு நீங்குதல் இன்றி என்னை வருத்துகின்றன காண்மின்கள்,’ என்கிறாள்.

English Translation

Are they springs dangling with Makara fish?, -that make damsels and Asuras fear and ask, "Where?", -O Ladies, See! The ornamented ears of the Lord who sleeps on a hooded snake kill me relentlessly

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்