விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்றும் நின்றேதிகழும்*  செய்ய ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்,* 
    அன்றி என்ஆவிஅடும்*  அணி முத்தம்கொலோ? அறியேன்,*
    குன்றம் எடுத்தபிரான்*  முறுவல் எனதுஆவிஅடும்* 
    ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்வுஇடமே       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்றும் நின்றே திகழும் - எப்போதும் ஒருபடிப்பட நின்று விளங்கும் தாய்
செய்ய சுடர் ஈன் - சிவந்த சுடரை வெளிப்படுத்து மதான
வெண் மின் கொல் - வெண்ணிறமான மின்னலோ!
அன்றி - அல்லது
என் ஆவி அடும் அணி முத்தம் கொலோ - என்னுயிரை மாய்க்கின்ற அழகிய முத்துநிரையோ!;
அறியேன் - அறிகின்றிலேன்;

விளக்க உரை

‘கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்த உபகாரகனான ஸ்ரீகிருஷ்ணனுடைய முறுவலானது, என்றும் நிலைபெற்று விளங்குகின்ற செம்மையை வீசுகின்ற சுடரையுடைய வெண்மையான மின்னல்தானோ? அன்றி, என் உயிரை வருத்துகின்ற அழகிய முத்துகள்தாமோ? அறியேன் எனது ஆவியை வருத்துகின்றது, அன்னைமீர்! நான் பிழைக்கும் இடத்தை ஒரு சிறிதும் அறிகின்றிலேன்,’ என்றபடி.

English Translation

Is it a flash of lightning, raking a fire that burns my soul? Or is it a beautiful string of pearls, I know not, The radiant smile of my Lord who lifted the mount kills me. Alas, Ladies! I know not where to escape

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்