விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்உயிர்க்கு ஏழையர்மேல்* வளையும் இணை நீலவிற்கொல்,* 
    மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,*  மதனன்
    தன்உயிர்த் தாதை* கண்ணபெருமான் புருவம்அவையே,* 
    என்உயிர் மேலனவாய்* அடுகின்றன என்றும் நின்றே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீலம் இணைவில் கொல் - நீல நிறத்தையுடைய இரண்டு விற்களோ?
மன்னிய சீர் மதனன் - அழியாவழகடையனான மன்மதனுடைய
கரும்பு சிலை கொல் - கரும்பமயமான வில்தானோ?
ம நனன் தன் உயிர் தாதை கண்ணன் பெருமான் - மன்மதனுக்கு அபிமதனான் பிதாவாகிய கண்ணபிரானுடைய
புருவம் அவையே - அந்தத் திருப்புருவங்களே

விளக்க உரை

மன்மதனுக்கு உயிர் போன்ற தந்தையாகிய கண்ணபிரானுடைய புருவங்களானவை, இனிய உயிர்களைக் கவர்வதற்காகப் பெண்கள்மேல் வளைகின்ற நீல நிறம் பொருந்திய விற்கள்தாமோ? அன்றிக்கே, நிலைபெற்ற கீர்த்தியையுடைய மன்மதனுடைய கரும்பு வில்தாமோ என்னுடைய உயிர் மேலனவாய் எப்பொழுதும் நிலை பெற்று வருத்துகின்றன?

English Translation

Is it the dark sugarcane bow of the blessed Madana, god of love directed on sweet damsels? The eyebrows of my Krishna, the father of Madana, appear everywhere and kill me, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்