விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாலியதுஓர் கனிகொல்*  வினையாட்டியேன் வல்வினைகொல்,* 
    கோலம் திரள்பவளக்*  கொழும்துண்டம்கொலோ? அறியேன்,*
    நீல நெடுமுகில்போல்*  திருமேனி அம்மான் தொண்டைவாய்,* 
    ஏலும் திசையுள்எல்லாம்*  வந்து தோன்றும் என்இன்உயிர்க்கே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாலியது ஒர் கனி கொல் - விலக்ஷ்ணமாயிருப்ப தொரு பழமோ?
வினையாட்டியேன் வல்வினை கொல்- இப்பழத்தை இப்போதேய நுபவிக்கப் பெறாத பாவத்தையுடையேனான வென்னுடையவலிய பாவமே ஒரு வடிவு கொண்டதாயிருக்கிறதோ?
கோலம் திரள் - ஸௌந்தர்யம் ஸௌகுமார்யம் முதலான நலங்களெல்லான் ஒருசேரத்திரண்ட
பவளம் கொழு துண்டம் கொலோ - பவளத்தினுடைய கொழுவிய தொரு முறியோ?
அறியேன் - அறிகின்றேனில்லை;

விளக்க உரை

 நீல நிறம் பொருந்திய பெரிய முகில் போன்ற திருமேனியையுடைய அம்மானது கொவ்வைக்கனி போன்ற திரு அதரமானது, தூய்மையையுடையதான ஒப்பற்ற பழநீதானோ? தீவினையேனாகிய என்னுடைய கொடிய தீவினைதானோ? அழகிய திரண்ட பவளத்தினது கொழுவிய துண்டுதானோ? அறியேன்; தப்புவதற்குத் தகுதியான திக்குகளில் எல்லாம் எனது இனிய உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்கு வந்து தோன்றாநின்றது.

English Translation

Is it a beautiful berry fruit, -the sins of my wicked self?, -Or is it a coral spring of beauty, I know not, The radiant lips of my dark hued Lord appear me everywhere, sweetly to my soul

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்