விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏழையர் ஆவிஉண்ணும்*  இணைக் கூற்றம்கொலோ அறியேன்,* 
    ஆழிஅம் கண்ணபிரான்*  திருக்கண்கள் கொலோ அறியேன்,*
    சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,* 
    தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே?  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி அம் கண்ணபிரான் - கடல் வண்ணனான கண்ண பிரானுடைய
திரு கண்கள் கொலோ - திருக்கண்கள்தானோ!
அறியேன் - அறிகின்றிலேன்;
தாமரை நாள் மலர் போல் - அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலே
வந்து தோன்றும் கண்டீர் - வந்து தோன்றா நின்றன காண்மின்;

விளக்க உரை

தோழிமீர்காள்! அன்னைமீர்காள்! கடல் போன்ற நிறத்தையுடைய அழகிய கண்ணபிரானுடைய திருக்கண்கள், பெண்களினுடைய உயிர்களை உண்ணும்படியான இரண்டு கூற்றங்கள் தாமோ? அறியேன்! அல்லது, திருக்கண்கள்தாமோ? அறியேன்! அத்திருகண்கள் நான்கு புறங்களிலும் அன்று மலர்ந்த மலர்கள் போன்று வந்து தோன்றாநின்றன; வருத்தத்தையுடைய யான் என்ன செய்வேன்? 

English Translation

Are they two sentinels of death, come to devour the souls of females, or are they the beautiful eyes of the ocean-hued Lord?, -I know not what they are. All around they appear, like day-fresh lotus flowers. Oh, see! O Sinful me! Sakhis! Ladies! What shall I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்