விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏற்றுஅரும் வைகுந்தத்தை*  அருளும் நமக்கு,*  ஆயர்குலத்து 
    ஈற்றுஇளம் பிள்ளைஒன்றாய்ப்புக்கு*  மாயங்களே இயற்றி,*
    கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று*  ஐவர்க்காய் ஆக்கொடும்சேனைதடிந்து,* 
    ஆற்றல் மிக்கான் பெரிய*  பரஞ்சோதி புக்க அரியே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈன்று இளபிள்ளை ஒன்று ஆய் - அப்போது பிறந்து விலக்ஷ்ணமான பச்சைப் பசுங் குழந்தையாய்க்கொண்டு
ஆயர் குலத்து புக்கு - திருவாய்ப்பாடியிலே சென்று சேர்ந்து
மாயங்களே இயற்றி - பல பல அற்புதச்செயல்களையே செய்து
கூற்று இயல் கஞ்சனை கொன்று - யமன் போன்ற கம்ஸனையும்; முடித்து (பிறகு)
ஐவர்க்கு ஆய் - பஞ்ச பாலீண்டவர்களுக்குப் பகூபாதியாயிருந்குஷது

விளக்க உரை

ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்குத் தேறுதலாகக் கூறும் பாசுரமிது நெஞ்சை நோக்கின விளி மூலத்தில் இல்லையாகிலும், முதலடியில் ‘நமக்கு’ என்றிருப்பது கொண்டு இங்ஙனே கொள்ளக் குறையில்லே. “தம் திருவுள்ளத்தை ஆச்வஸிப்பிக்கிறார்” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல். “ஏற்றரும் வைகுந்தத்தையருளும் நமக்கு” என்கிறவிது பாசுரத்தின் முடிவிலே அந்வயிக்கக்கடவது. ஈற்றிளம்பிள்ளையொன்றாய் ஆயர்குலத்துப்புக்கு—‘ஈறு இளம்பிள்ளை என்றாவது ஈன்று இளம் பிள்ளை’ என்றாவது பகுத்துக்கொள்ளலாம், இரண்டுவகையிலும் கருத்து ஒன்றே. மிக இளமை தங்கிய பிள்ளையென்றபடி இங்கு இது சொல்லுவது எதற்காகவென்னில், அவன் நமக்குப் பரம புருஷார்த்தம் தரவேணுமானால் நம்பக்கலிலே ஏதேனும் கைம்முதல் இருக்கவேணுமே; அஃதில்லாமல் தந்தருளமாட்டானே; அஃதொன்றுமில்லையே என்று தளரவேண்டர் நம்முடைய படியைப் பார்க்கவறியாத பேதைக் குழவிகாண்! என்று அவனுடைய மௌக்த்யத்தைச் சொல்லுகிறது. மாயங்களேயிற்றி—ஆயதசாலையிலே புகுந்து ஆயுதங்களை முறிப்பது. வண்ணானைக்கொன்று பரிவட்டங்களணிந்து கொள்வது, குவலயாபீட மதயானையின் கொம்பை முறிப்பது, மல்லரைத் தகர்ப்பது ஆக இப்படிப்பட்ட ஆச்சரியங்களைச் செய்தமை சொல்லுகிறது. இச்செயல்களைச் செய்தபின்னர் அடுத்துச் செய்தது கம்ஸவதமாகையாலே “கூற்றியல கஞ்சனேக் கொன்று” என்றது. உடலையுமுயிரையும் பிரிக்கும் ஸ்வபாவமுடைய யமனைப்போன்று ஸ்ரீ வஸீதேவ தேவகிகளுக்கு உயிரான கண்ணனைப் பிரித்ததனால் கூற்றியல் கஞ்சனென்றார். பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்த செயல்களிவை; இனிப் பருவம் நிரம்பிய பின் செய்தமை சொல்லுகிறது ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து என்று. இவ்வளவு செய்தும் ஒன்றுஞ் செய்யாதான்போல் அஸந்துஷ்டனானா னென்கிறது—ஆற்றல்மிக்கான் என்று.

English Translation

He took birth in the cowherd-clan, did many wondrous deeds, killed kamsa, befriended the Pandavas, and destroyed the armies, Full of patient goodness, he shall by his grace give us the precious ascent to Vaikunta, Haril.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்