விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆளியைக் காண்பரியாய்*  அரிகாண் நரியாய்,*  அரக்கர் 
    ஊளைஇட்டு அன்று இலங்கைகடந்து*  பிலம்புக்குஒளிப்ப,*
    மீளியம் புள்ளைக்கடாய்*  விறல் மாலியைக் கொன்று,*  பின்னும் 
    ஆள்உயர் குன்றங்கள் செய்து*  அடர்த்தானையும் காண்டும்கொலோ?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆளியை காண்பரி ஆய் - யாளியைக் கண்ட குதிரை போலவும்
அரி காண் நாஜீ ஆய் - சிங்கத்தைக் கண்ட நாஜீ போலவும்
அரக்கர் - ராக்ஷஸர்கன்
அன்று ஊளையிட்டு - அக்காலத்தில் அச்சத்தினாலே கதறிக்கொண்டு
இலங்கை கடந்து - லங்காபுரியை விட்டு
பிலம் புக்கு ஒளிப்ப - பாதாளத்திலே புகுந்து ஒளிக்கும் படியாக

விளக்க உரை

ஸீகேசனென்னும் இராக்கதனுக்கு மாலியவான், மாலி, ஸீமாலியென மூன்று பிள்ளைகள் பிறந்ததும், அவர்கள் தவம்புரிந்து பெருமைபெற்று இலங்கையிற் குடிபுகுந்து விவாஹம் செய்துகொண்டு பல மக்களைப் பெற்றதும், தேவர்கள் சிவ பெருமானை அடைக்கலம் புகுந்து அவர் சொன்ன வுபாயத்தினால் ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்தும், அவர் அவர்கட்கு அபயமளித்ததும், அது தெரிந்து ராக்ஷஸர்கள் கோபங்கொண்டு படையெடுத்துத் தேவலோகஞ் சென்றதும், அப்பொழுது எம்பெருமான் கரூடவாஹனத்திலேறி அங்கு வந்து தோன்ற, அவரைச் சூழ்ந்து அரக்கர் அம்பு மாரி பொழியாப்புகுந்ததும், பிறகு அரக்கர்கட்கும் திருமாலுக்கும் பெருத்த யுத்தம் நடந்ததும், அதில் மாலி மரணமடைந்ததும், மற்ற மாலியவான் சுமாலி யென்னுமிருவரும் திருமாலுடன் போர் புரிந்து பராஜயமடைந்து மற்றுமுள்ள இலங்கையரையுங் கூட்டிக் கொண்டு பாதாளலோகம் போய்ச் சேர்ந்ததும் உத்தர ஸ்ரீராமாயணத்தில் (5, 6, 7, 8 ஸர்க்கங்களில்) விரிவாகக் கூறப்பட்டவை. அவ்வரலாறே இப்பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன மூவருள் ஒருவனான சுமாலியின் மகளான கைகயிக்கு இராவணன் முதலியவர்கள் பிறந்தனரென்பதும் அறியத்தக்கது, இப்படி விரோதிநிஸநம் செய்யுமியல்வினனான பெருமான் எனது விரோதிகளையடங்கலுஞ் செற்று எனக்குக் காட்சி தருவதென்றைக்கோ என்றாராயிற்று.

English Translation

Like horses before a ganayle, like foxes before a lion, the demons howled and left their haunts and went into hiding, when the Garuda-Lord killed the fierce Mail and stacked bodies like a mountain, Oh, can we not see him too?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்