விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்துஎய்து மாறுஅறியேன்*  மல்கு நீலச் சுடர்தழைப்ப,* 
    செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து*  ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*
    அந்தரமேல் செம்பட்டோடு*  அடி உந்திகை மார்புகண்வாய்,* 
    செஞ்சுடர்ச் சோதி விடஉறை*  என்திரு மார்பனையே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அந்தரம் மேல் - திருவரை மேல்சாத்தின
செம் படடோடு - பீதாம்பரத்தோடு
அடி உந்தி கை மார்பு கணவாய் - திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருப்பவளமுமாகிய வொளி
செம் சுடர் சோதிவிட  -  சிவந்தழகிய வொளியைப் பரப்ப
உறை என் திருமார் - எனது திருமாலை

விளக்க உரை

உன்னைப் பெறுகைக்கு என்பக்கல் ஒர் உபாயமில்லை; நீயே வந்து விஷயீகரிக்கவேணுமென்கிறார். ‘உம்மால் ஒரு உபாயநுஷ்டானம்யோ உன்படியிருப்பதென்கிறார். எம்பெருமான் திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்து கிடக்கும்போது திவ்யரூபத்தின் நீலச்சுடர் மல்லா நின்றது; பீதகவாடை திருவடிகள் திருநாபிக்கமலம் திருக்கை திருமார்பு திருக்கண் திருப்பவளம் ஆகிய இவற்றினின்று சிவந்த சுடரையுடைத்தான் தேஜஸ்ஸூ ப்ரஸாஜீயாநின்றது இந்த நிலைமைக்கு ஒரு த்ருஷ்டாந்தமிடுகிறார் “செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொருமாணிக்கறுஞ் செய்து சேர்வது போல்” என்று ‘செஞ்சுடர்ச் சோதிகள் பூத்த ஒரு மாணிக்கப்பாறை சாய்நது கிடப்பதுபோலுள்ளது என்று வருணித்தவாறு. அந்தரம் என்று இடுப்பைச் சொல்லுகிறது “செம்பட்டோடு’ என்றவிடத்து. ஒடு-உம்மைப்பொருளது. செவ்விய பட்டாடையும் என்றபடி. “கோயிலிலே கண்வளர்ந்தருளாகிற வுன்னை” என்றார் ஆயிரப்படியில் பிள்ளான். “திருப்பாற்கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக்கொண்டு அதிலை நாநாவர்வணமாயிருப்பதொரு மேல்விரியை விரித்தாப்போலே சாய்தருள” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி

English Translation

I know not how to see the Lord with Lakshmi on his chest. He looks like a brilliant gem, spreading a flood of blue effulgence. His feet and hands, lips and eyes, chest and navel are like sparks of dazzling red blowing everywhere

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்