விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்னுடைக் கோவலனே!*  என் பொல்லாக் கருமாணிக்கமே,* 
    உன்னுடை உந்தி மலர்*  உலகம் அவைமூன்றும் பரந்து,*
    உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்*  உன்னைக் கண்டுகொண்டிட்டு,* 
    என்னுடை ஆர்உயிரார்*  எங்ஙனேகொல் வந்து எய்துவரே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் - உனது திருநாபியிலே மலர்ந்த மூவுலகங்களிலுமுள்ள விஷயங்களெல்லாவற்றலும்
பரந்து - சாபல்யப்பட்டிருந்து.
உன்னுடை சோதி வெள்ளத்து அகம்போல் உன்னை - உனக்கே யஸாதாரணமாய் விலக்ஷ்ண தேஜோராசி ரூபமாயிருக்கிற ஸ்ரீவைகுண்டலோகத்திலே யிருக்கிறவுன்னை
கண்டு கொண்டிட்டு - காணப்பெறுமாறு
எங்ஙனே கொல் வந்து எய்துவர் - எப்படி வந்து சேருவர்?

விளக்க உரை

லௌகிக விஷயங்களிலே கைகழிந்திருக்கிற என் ஆக்மா உன்னை எங்ஙனே கிட்டக்கடவதென்கிறார். ஈடு;- “பலன் உம்மதான பின்பு நீரும் சிறிது யத்நம் பண்ணவேணுங்காணுமென்ன: நீ ஸ்ருஷ்டித்த லோகங்களில் விஷயங்கள்தோறும் அகப்பட்டுக்கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒருஸாதனத்தை யநுஷ்டித்துவந்து பெறுகையென்று ஒன்றுண்டோ வென்கிறார். என்னுடையக் கோவலனே!—பாண்டவர்கள் என்னுடையவனென்று உன்னையபிமானிக்கும்படி உன்னையவர்களுக்கு நீ விதேயனாக்கினதுபோல எனக்கும் விதேயனாக்கியிருக்கின்றா யன்றோ என்றபடி. எம்பெருமானுடைய சீலகுணத்தை யநுபவித்துச் சொல்லுகிறபடி. என் பொல்லாக் கருமாணிக்கமே! - இதுவடிவழகிலீடுபட்டுக் சொல்லுகிறபடி. பொல்லா என்பதற்கு இரண்டுபடியாகப் பொருள்கொள்வர். எதிர்மறையிலக்கணையால் நல்ல கருமாணிக்கமே யென்னுதல்; பொல்லல்-துளைத்தல்; பொல்லா—துளைபடாத; அயலார் அநுபவியாத புதிய ரத்னம் போன்றவனேயென்னுதல். உன்னுடையுந்திமலருலகமவை மூன்றும் பரந்து த்வந்நாபீகமலோத்பூத ஸகலலோகாந்தர்வர்த்தி ஸர்வவிஷயங்களிலும் ப்ரவணமான என் ஆத்மா” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல். உன்னுடைய திருநாபியிலே விஸ்த்ருதமாகாநன்றுள்ள ஸகல லோகங்களிலுமுண்டான சப்தாதிவிஷயங்கள்தோறும் ப்ரவணனாயிருப்பது என்னுடைய நிலைமை என்று தம்முடைய படியைப் பேசித் கொள்ளுகிறா ராழ்வார். நீயோ எட்டாத நிலத்திலிருக்கிறாய்; உன்னை எங்ஙனே கண்டுகொள்வது—என்கிறார் மூன்றாமடியினால். என்னுடை ஆருயிரார்- இது சேஷபித்துச் சொல்லுகிற வார்த்தை. வயிறடித்திங்காரார் புகுதுவாலீ ஐயரிவரல்லால் (சிறிய திருமடல்) என்றவிடத்திற்போல. மிகவும் துச்சமான என்னுடைய ஆத்மாவானது என்றபடி. பிரானே! உனக்கே அஸாதாரமாணமாய் நிரவதிக தேஜோரூபமாய் அத்யர்க்காதலதீப்தம் தத ஸ்த்தாநம் என்று சொல்லப்படுமதான ஸ்ரீவைகுண்டத்தை யிருப்பிடமாக வுடையையாயிருக்கிற வுன்னை ப்ரக்ருதங்களிலுண்டான ஸம்பந்தமும் ஊற்றமும் அற்று எங்ஙனே நான் வந்து சேரப்போகிறே னென்றாராயிற்று.

English Translation

My Gopala, my uncut black-gem Lord! The three worlds are spread in your lotus-navel. In the midst of your effulgent radiance, how is this soul to see and attain you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்