விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெளிவுற்று வீவுஇன்றி*  நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,* 
    தெளிவுற்ற கண்ணனைத்*  தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*
    தெளிவுற்ற ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்,*  அவர் 
    தெளிவுற்ற சிந்தையர்*  பாமரு மூவுலகத்துள்ளே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வீவு இன்றி நின்றவர்க்கு - அந்தத் தெளிவுக்கு ஒரு நாளும் விச்சேதமில்லாமலிருப்பவர்களுக்கு
இன்பம் கதி செய்யம் - இன்பமே வடிவெடுத்ததான கதியைச் செய்விப்பவனாய்
தெளிவு உற்ற கண்ணனை - தெளிவு தானே வடிவெடுத்திருப்பவனான எம்பெருமானைக் குறித்து
தென் குருகூர் சடகோபன் சொல் - ஆழ்வார் அருளிச்செய்ததான
தெளிவு உற்ற ஆயிரத்துள் - தெளிந்த ஆயிரத்தினுள்ளை

விளக்க உரை

இத்திருவாய்மொழியைக் கற்பவர்கள் இவ்விருள்தரு மாஞாலத்தில் இருக்கச் செய்தேயும் தெளிந்த சிந்தையராயிருப்பர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. தெளிவுற்று நின்றவர்க்கு, லீவு இன்றி நின்றவர்க்கு—உபாயமும் உபேயமும் அவனே யென்று தெளிந்திருக்குமவர்களுக்கு; இந்தத் தெளிவு இருக்கச் செய்தேயும் சிலர் ஆபாஸபுத்திகளைக் கொண்டு வாதங்கள் செய்து புத்திபேதத்தை யுண்டாக்க முயலக்கூடும்; அப்போதும் தளராதே யிருக்குமவர்கள்-வீவின்றிநின்றவர்; ஆக, ஒருபடியாலும் சலிப்பிக்க வொண்ணாத திண்ணிய அத்யவஸாயமுடையார்க்கு என்றபடி யுத்தம் செய்யமாட்டேனென்று நின்ற அர்ஜுநன் கீதையைக் கேட்டுத்தலைக்கட்டி “ஸ்திதோ ஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ.” என்று தளும் புதல் தீர்ந்து நின்றானன்றே; அப்படிப்பட்டவர்களைச் சொல்லுகிறது. இவ்விடத்து ஈடு முப்பத்தாறாராத்தில் ஒரு ஸம்வாதம் அற்புதமாகவுள்ளது காணீர்;-“அர்ஜுநன்தான் எம்பெருமானைப் பெற்றானே இல்லையோ?” என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்டாராம். அதற்கு நஞ்சீய ரருளிக்செய்த உத்தரம்: அர்ஜுநன் பெற்றனா இல்லையா என்கிற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள் என்று அவர்களையெல்லாம் ஆராய்ந்துபார்த்தோ நாம் பற்றவேணுமேயொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணீர் கண்டால் தாஹித்தவன் குடிக்கந் காணாநின்றோம்; இது குடித்து யார் யார் தாஹம் தீர்ந்தார்கள் என்று விசாரித்துப் பார்த்தா குடிக்கிறோம்: இல்லையே”—என்று அருளிச் செய்தாராம். இன்பக்கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனை-இன்பமயமான கதி—அர்ச்சிராதிகதி; அதைப் பண்ணித தருமவனென்கை. சேதநன் தெளிவுறாமல் கலங்கியே கிடந்தாலும், இவன் தெளியாத இழவுதீர எம்பெருமான் தான் நெளிந்திருந்து காரியஞ் செய்வனென்க. இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த, தெளிவுற்றவாயிரம்-இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- “ஸஹ்யத்திலே கலங்கின நீரானது ஒரோ ப்ரதேசங்களிலே வந்து தெளிந்து உபயோக யோக்யமாமாப் போலே, அதிக்ருதாதிகாரமாய் கூளமும் பலாப்பிசினும் போலே ஒன்றை நிஷ்கர்ஷித்துப் பிரிக்க வொண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தமானது ஸர்வாதிகாரமாய் ஸர்வஸம்சயங்களும் தீர்ந்து தெளிந்தது இவர் பக்கலிலே வந்தவாறே.” இன்பக்கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனை-இன்பமான கதி—அர்ச்சிராதிகதி; அதைப் பண்ணித் தருமவனென்கை. சேதநன் தெளிவுறாமல் கலங்கியே கிடந்தாலும், இவன் தெளியாத இழவுதீர எம்பெருமான் தான் நெளிந்திருந்து காரியஞ் செய்பனென்க. இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த, தெளிவுற்றவாயிரம்-இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- “ஸஹயத்திலே கலங்கின நீரானது ஒரோ ப்ரதேசங்களிலே வந்து தெளிந்து உபயோக யோக்யமாமாப் போலே, அதிக்ருதாதிகாரமாய் கூளமும் பலாப்பிசினும் போலே ஒன்றை நிஷ்கர்ஷித்துப் பிரிக்க வொண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தமானது ஸர்வாதிகாரமாய் ஸர்வஸம்சயங்களும் தீர்த்து தெளிந்தது இவர் பக்கலிலே வந்தவாறே.”

English Translation

The decad of the lucid the thousand by kurugur Satokapon on Krishna –who gives joy to those who stand and worship him, -will bequeath clear thought to those who master it

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்