விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார்த்தை அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு*  இறப்புஇவை
    பேர்த்து,*  பெரும்துன்பம் வேர்அற நீக்கி*  தன் தாளின்கீழ்ச் 
    சேர்த்து,*  அவன் செய்யும்*  சேமத்தைஎண்ணித் தெளிவுற்றே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெரு துன்பம் வேர் அற நீக்கி - கைவல்யாநுபவமாகிற மஹாநர்த்தத்திலும் புகாமே காத்து
தன் தாளின் கீழ் சேர்த்து - தன்னுடைய திருவடிகளின் கீழே சேர்த்துக்கொண்டு
அவன் செய்யும் சேமத்தை எண்ணி - இப்படியாக அவன் செய்தருளும் ஸீக்ஷ்மங்களை யநுஸந்தித்து
தெளிவு கூற்று - தெளிவு பெற்று வைத்து
மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ - அப்பெருமானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரொ?

விளக்க உரை

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய இத்யாதி சரமச்லோக மருளிச்செய்த மஹாதுணத்திலே யீடுபட்டுப் பேசுகிறார். வார்த்தை யறிபவர் என்றது—மாமேகம் சரணம் வ்ரஜ-ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்ற வார்த்தையை யறியுமவர்கள் என்றபடி. முமுக்ஷுப்படியிவ் சரமச்லோக ப்ரகரணத்தின் முடிவில் இப்பாசுரத்தைச் சரமச்லோகார்த்தமாக நிர்வஹித்தருளின்படி காண்க. ஸர்வபா பேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்றதின் அர்த்தமே மேல்மூன்றடிகளாலும் பேசப்படுகிறது. போர்த்த பிறப்பு=ஆத்மஸ்வரூபம் தெரியாதபடி அறிவைக்கெடுக்கும் ஜன்மம். கருமமடியாகப் பிறக்கிறோமாதலால் பிறக்கப்பிறக்க ஒளிமழுங்கி “ஸம்ஸாலீரிகள் தங்களையும் ஈச்வரனையும் மறந்து கொல்லும் வியாதி என்னும்படி பலபல நோய்களும் வந்து புகும்; (மூப்பு) இடிவிழுந்தாற்போலே வந்து நிற்குங் கிழத்தனம். (இறப்பு) இப்படி யிருக்கச்செய்தே திடீரென்று ஒருநாள் நேரும் மரணம். இவற்றை யெல்லாந் தொலைத்து. அதாவது மீண்டு மீண்டும் பிறந்து அநர்த்த்ப்படாதபடி செய்தருளி யென்றபடி. இதற்கு மேல் பெருந்துன்பமாவது—ஜன்மம் தொலைந்த பின்பும் நேரக்கூடியதான கைவல்ய மோக்ஷமாகிற மஹானர்த்தம். அதையும் ஸவா ஸநமாகப் போக்குகையாவது அதிலே நசையறும்படி பண்ணுகை. ஆக இவ்வளவு நன்மைகளையுஞ் செய்து, தன் தாளின் கீழ் சேர்த்து—பாதரேகை போலே தன் திருவடிகளின் கீழ் அந்வயிப்பித்துக் கொண்டு. அவன் செய்யும் சேமத்தை யெண்ணி = இதற்குப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காணீர்;-“இவனுக்கு ஒன்றுஞ்செய்யாதாரைப்போலே என் செய்வோ மென்றிருக்கு மென்னுதல்; இக்கைங்கர்யத்துக்கு நிலவரான நித்யஸீரிதளோழிடே சேர்த்து யாவதாத்பாவியாக்கு மென்னுதல்.”

English Translation

He removes and destroys by the root the great miseries of Maya-birth, sickness, old age and death, then takes us all unto his good feet. Knowing this, will anyone with wisdom be a devotee of the Lord?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்