விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயம் அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க*  ஓர்ஐவர்க்குஆய்,*
    தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று*  சேனையை 
    நாசம் செய்திட்டு,*  நடந்த நல் வார்த்தை அறிந்துமே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓர்  ஐவர்க்கு ஆய் - விலக்ஷ்ணர்களான பஞ்சபாண்டவர்களுக்காகி
தேசம் அறிய - ஸகலலோக ப்ரஸித்த மாம்படி
ஓர் சாரதி ஆய் சென்று - ஒப்பற்ற ஸாரதியாகப் போய்
சேனையை நாசம் செய்திட்டு - எல்லாம் சேனைகளையும் அழியச்செய்து
நடந்தநல்வார்த்தை அறிந்தும் - தன்னடிச் சோதிக் கெழுந்தருளினானென்கிற  நல்வார்த்தையை யறிந்தும்

விளக்க உரை

பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து இழிதொழில் செய்து பார்த்தஸாரதி யென்று பேர்பெற்றுத் தாழநின்று அநிஷ்டவர்க்கங்களை அகற்றின மஹாகுணத்தைப் பேசுகிறார். தாயம் செறும்-தாயப்ராப்தியாலே செறுகிற என்ற டி பங்காளிமுறையாலே சண்டை செய்தமையைச் சொன்னபடி. தேசமறிய வோர்சாரதியாய்ச் சென்று-இற்றைக்கும் அர்ச்சாவதாரத்திலுங் கூட அனைவரு மறிந்துகொள்ளுமாறு பார்த்தசாரதி யென்று பேர்பெற்று நிற்கிறானன்றோ. தேசமறிய என்றவிடத்து நம்பிள்ளை யருளிச் செய்வது காணீர்; “நாட்டில் ஸ்வாதந்த்ர்ய பாரதந்த்ர்யங்கள் வ்யவஸ்திதமானவிடத்திலும் ரஹஸ்யத்திலேயிறே அவை ப்ரயோகிப்பது. பர்த்தாவும் பார்யையைக் காலைப்பிடிப்பது ரஹஸயத்திலேயிறே. இப்படி யிருக்கச் செய்தேயிறே ஜகத்ப்ரஸித்தமாம்படி தன்னைத் தாழவிட்டது” நடந்த—திருநாடேற வெழுந்தருளின என்றபடி. க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந மோஹயித்வா ஜகத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்த்தாந முத்தமம் என்ற மஹாபாரத ச்லோகம் இங்கே யநுஸந்திப்பது.

English Translation

The Lord drove a chariot, destroying the hundred who cheated in dice, securing victory for the good five, in a battle that the world spoke about, knowing this, will anyone seek and but the Lord?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்