விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செல்ல உணர்ந்தவர்*  செல்வன்தன் சீர்அன்றி கற்பரோ,* 
    எல்லை இலாத பெரும்தவத்தால்*  பல செய்மிறை,*
    அல்லல் அமரரைச் செய்யும்*  இரணியன் ஆகத்தை,* 
    மல்லல் அரிஉருஆய்*  செய்த மாயம் அறிந்துமே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பல செய் மிறை - பலவகையாகச் செய்யப்ப பட்டலோகபீடையை யுடையனாய்
அமரரை அல்லல் செய்யும் - (விசேக்ஷித்து) தேவர்களுக்குத் துன்பங்களை யுண்டுபண்ணினவனான
இரணியன் ஆகத்தை - ஹிரண்யாஸீரனுடைய உடலை,
மல்லல் அரி உரு ஆய் செய்த - பெரிய நரசிங்க வடிவையுடைனாய்க் கொண்டு இருபிளவாகச் செய்த
மாயம் அறிந்தும் - ஆச்சரியத்தை யறிந்து வைத்தும்

விளக்க உரை

நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி ஆச்ரிதரக்ஷ்ணம் பண்ணின மஹாகுணத்தைப் பேசுகிறாரிதில். செல்லவுணர்ந்தவர் என்றது—உணர்ச்சி எவ்வளவு தூரம் செல்லாமோ அவ்வளவும் செல்ல விவேகிக்கவல்லவர்கள் என்றபடி. ஜச்வர்ய கைவல்யங்களில் மாத்திரம் நின்றுவிடாதே எல்லே நிலமான பகவதநுபவம் வரையிலும் உணர்ச்சியைச் செல்லவிட்டவர்கள் என்றபடி. அன்னவர்கள் திருவுக்குந்திருவாகிய செல்வானுடைய சீர்களையேயன்றோ கற்பார். இப்போது தாம் விவக்ஷித்த சீர் இன்னதென்கிறது மேல் மூன்றடிகளில். அளவிறந்த தபஸ்ஸீக்களைச் செய்து அதனால் அபரிமிதமான வரங்களைப் பெற்று. அப்படி வரங்கொடுத்த தெய்வங்களையும் கண்ணீர்பாயவிட்ட இரணியனது உடலே, பெரியவடிவுகொண்ட நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றிப் பிளந்த ஆச்சரியத்தை யறிந்துவைத்தும் அந்த ஆச்ரிதவாத்ஸல்ய குணத்தையல்லது வேறொன்றைக் கற்பரோ? மல்லல்-பெருமை; ”அபரிமிதபரிமாண ந்ருஸிம்ஹரூவதரனாய்க் கொண்டு” என்பது ஆறாயிரப்படி. “மஹாவிஷ்ணும் என்னும்படியே ஹிரண்யன் குளப்படியாம்படியாகப் [ குளப்படி= குளம்பு அடி. குரமாத்ரமென்றபடி] பெரிய வடிவைக்கொண்டு” என்பது ஈடு. செய்தமாயம்-நரஸிம்ஹதநு ரகௌணீ ஸமஸமய ஸ்முத்பவச்ச பக்தகிரஸ்தம்பே ச ஸம்பவஸ்தே என்று ஆழ்வான் காட்டின மாயங்கள்

English Translation

The Asura king Hiranya with the power of his penance afflicted the gods. The Lord then came as a man-lion and showed his wonder. Knowing this, will knowers learn any other than the Lord's names?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்