விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டும் தெளிந்தும் கற்றார்*  கண்ணற்கு ஆளன்றி ஆவரோ,* 
    வண்டுஉண் மலர்த்தொங்கல்*  மார்க்கண்டேயனுக்கு வாழும்நாள்*
    இண்டைச் சடைமுடி*  ஈசன்உடன்கொண்டு உசாச்செல்ல,* 
    கொண்டுஅங்கு தன்னொடும் கொண்டு*  உடன்சென்றது உணர்ந்துமே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன்னோடும் கொண்டு - தன்னோடே கூட்டிக் கொண்டு
உடன் சென்றது - பிரியாதே யிருந்த படியை
உணர்ந்தும் - புராணாதி முகத்தாலேயறிந்தும்
கண்டும் தெளிந்தும் கற்றார் - கண்ணாரக் கண்டும் நெஞ்சாரத்தெளிந்தும் கற்றவர்கள்
கண்ணற்கு அன்றி ஆள் ஆவரோ? - கண்ணபிரானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரோ

விளக்க உரை

“கண்டுந் தெளிந்துங் கற்றார்” என்பதை உருபு பிரித்துக் கூட்டி “கற்று தெளிந்து கண்டார் என்று அந்வயிப்பர் நம்பிள்ளை. முதலிலே யொன்றைக்கற்பது; பிறகு அதிலே மனனத்தனால் தெளிவு பிறப்பது; பிறகு அவ்வர்த்தம் கண்ணாற் கண்ட மாதிரியேயாவது: ஆக விங்ஙனே முறையாதலால். ப்ரிய ஹிதங்களை ச்ரவணம் பண்ணித் தங்களிலே மனனம் பண்ணி அவற்றை ஸாகூஷாத்கரித்தவர்கள் கண்ணனுக்கன்றி யாளாவரோ? என்கை. ம்ரு கண்டு வென்னும் முனிவர் பிள்ளை யில்லாக் குறையால் பிரமானைக் குறித்துத் தவஞ் செய்தபோது, பிரமன் ப்ரத்யக்ஷ்மாகி முனிவரே! அறிவில்லாமையும் அங்கஹீதத்வமும் பெரும்பிணியும் தீய குணங்களுமுடையனாய்ப் பத்தியும் அழகு பொலிந்த வடிவமும் ஆரோக்யமும் நற்குணமுடையனாய்ப் பதினாறுபிராயமே வாழ்பவனான குமாரனை விரும்புகின்றீரோ’ சொல்லும்’ என்ன; முனிவர் ‘ஆயுள் சிறிதேனும் அறிவும் அழகும் குணமும் சிறந்து பிணியிலனாகும் ஸத்புத்ரனையே வேண்டுகின்றேன்’ என்று தம் கருத்தைக் கூற, நான்முகக் கடவுள் அவ்வாறே ....[புராணபேதத்தால் இக்கதை சிறிது பேதப்படுவதுமுண்டு. பிரமனுடைய அநுக்ரஹத்தினால் ம்ருகண்டு முனிவர்க்குப் பிள்ளை பிறந்ததாகவும், அப்பிள்ளை ஒரு நாள் வீதியில் விளையாடிக்கொண்டிருக்கு மிருப்பைத் தாய் தந்தையர் ஆனந்தமாகக் கண்டுகொண்டிருக்குங்கால் ‘இப்பிள்ளைக்கு ஆயுள் குறுகிற்று’ என்று ஆகாசவாணி யொன்று செவிப்பட, அதனால் அத்தாய் தந்தையர் மிக்க வருத்தங்கொண்டதாகவும், அது கண்ட மார்க்கண்டேயன் ‘இதற்கு நீங்கள் வருந்தவேண்டா, அவ்வாபத்தை நானே போக்கிக் கொள்ளுகிறேன்’ என்று அவர்களைத் தேற்றித் தான் சிவபூஜை செய்யத் தொடங்கின னென்பதாகவும் சில புராணங்கள் கூறும்.]............அநுக்ரஹித்தனர். அங்ஙனம் ஊழ்வினையால் பதினாறு பிராயம் பெற்றுப் பிறந்தபுத்திரனான மார்க்கண்டேயன் தனது அல்பாயுஸ்ஸைக் குறித்து வருந்திய தாய் தந்தையரைத் தேற்றித் தான் விதியைக் கடந்து வருவதாகச் சொல்லி, தீர்க்காயுஸ்ஸு பெறுதற் பொருட்டுத் தினந்தோறும் சிவ பூஜை செய்து வருகையில், ஒருநாள் யமன் தூதரை யனுப்ப, அவர்கள் மார்க்கண்டேயனது தவக்கனலால் அவனே அணுகமாட்டாது அவன் செய்யும் சிவ பூஜைச் சிறப்பைக் கண்டஞ்சி வெருண்டோடி யமனிடம் செய்தி சொல்ல, யமனும் கோபித்துத் தனது மந்திரியான காலனை ஏவ, அவன் வந்து நயபயங்களாலழைக்கவும் மார்க்கண்டேயன் வரமாட்டேனென்று சொல்லிவிட, பிறகு யமன் மிகக் கொதித்துத் தானே நேரில் வந்து மார்க்கண்டேயனைக் காலபாசத்தாற் கட்டியிழுக்கத் தொடங்குகையில் அம்முநிகுமாரன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள, யமன் சிவலிங்கமுமுட்பட வலித்திழுக்கும்போது சிவபிரான் ஸ்ரீமந்நாராயணனைச் சிந்தைசெய்து அவனது திருவருள் பெற்று அங்குநின்று வெளிப்பட்டு யமனைக் காலாலுதைத்துத் தள்ளி முனிமகனுக்கு என்றும் பதினாறு பிராயமாகவே அனேக கல்பகாலமளவும் இனிது வாழும்படி தீர்க்காயுஸ்ஸைக் கொடுத்தருளினன் என்பதாகப் புராண வரலாறு. இங்ஙனம் சிவபிரான் மார்க்கண்டேயனுக்கு அருள் செய்தது திருமாலினருளால் தான் பெற்ற சக்தியினாலே யென்பதும், அச்சிவபிரானுக்கு அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்தவன் ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணனே யென்பதுமாகிய உண்மைபற்றி அவ்வரலாற்றை ப்ரயோஜககர்த்தாவின் காரியம் போலத் திருமாலின் மேலேற்றிக் கூறுவதுமுண்டு. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றந் தன்னை யஞ்சி, நின்சரணெனச் சரணாய்த் தகவில் காலனையுகமுனிந்தொழியா, பின்னையென்றும் நின்திருவடி பிரியாவண்ண மெண்ணிய பேரருள் எனக்கும் அன்னதாகுமென் றடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே என்ற பாசுரத்தில் இக் கதையை சிவபிரானுடைய ப்ரஸ்தாவமேயில்லாமல் அருளிச் செய்துள்ளார். சில புராணங்களில் மேலெந்தவாரியாகப் பார்க்கும்போது, பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்ததாகக் காணப்படினும், மஹாபாரதத்தில் ஆரண்யபர்வத்தில் நூற்றுத் தொண்ணுலீற்றிரண்டா மத்யாயத்தில் மார்க்கண்டேயன் தானே தருமபுத்திரை நோக்கிச் சொல்லுமளவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அநுவதிக்குமிடத்;து (பித்ருபக்தோ ஸ்ரீ ஸி விப்ரர்ஷெ! மாஞ் சைவ சரணம் கத) என்றுள்ள ச்லோகத்தினால் இவன் ஸ்ரீமந் நாராயணனைச் சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும். ஸ்ரீபாகவதத்திலும் பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்தியாயத்தில் “ஆராதயந் ஹருஷீகேசம் ஜிக்யே ம்ருத்யும் ஸீதுர்ஜயம்” என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிற்று ஸ்ரீமந் நாராயணனை ஆராதித்து, வெல்லவொண்ணுத யமனையும் வென்றொழித்தான் என்றது. மார்க்கண்டேயன் இங்ஙனம் நெடுநாள் வாழ்ந்துவருகையில், மஹாப்ரளயத்தைத் தான் காணவேணுமென்று ஆசைகொண்டு எம்பெருமானைப் போற்றிப் பிரார்த்தித்து அங்ஙனம் காணும்போது, மஹாப்ரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனொருவனையன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைத்திருக்கக் காணாதவனாய் அப்பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங் கண்டு முடிவில் தான் நற்கதி பெறுதற் பொருட்டுத் திருமாலையை சரணமடைய, அப்பெருமான் அவனைத் தனது திருவடிகளிற் சேர்த்துக் கொண்டானென்பது மார்க்கண்டேய சரிதத்தின் முடிவு. இப்பாட்டில் “இண்டைச் சடைமுடி யீசன்” என்றருளிச செய்ததன் கருத்தை அடியறிந்து ஆசாரியர்கள் வெளியிட்டருளின அழகு வாசாமகோசரம். ஆறாயிரப்படி ஸ்ரீ ஸீக்தி காண்மின்;-“மாதா பிதாக்களாலே மஹாதபஸா லப்தனாய் அநவரதம் உபலாலிதனாயிருந்த மார்க்கண்டேயன் தன்னுடைய ஆயுரர்த்தமாக ருத்ரனை யாச்ரயிக்க, அவனும் மத்ஸமீஹித ஸித்திக்காக நானும் பரமபுருஷனை நோக்கி தபச்சர்யை பண்ணி வர்த்திக்கிறது என்று சொல்லித் தன்னுடைய தபோ வேஷத்தொங் காட்டி அவனுடைய திருவடிகளையே ஆச்ரயிப்போம் வாவென்று அ

English Translation

The fragrant garland-deck Markandeya prayed for life. The mark-haired Siva took him in and showed himself as example. The Lord then took him unto himself. Contemplating this, will anyone seek a god other than Krishna?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்