விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூழல்கள் சிந்திக்கில்*  மாயன் கழல்அன்றி சூழ்வரோ,* 
    ஆழப் பெரும்புனல்*  தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்,*
    தாழப் படாமல்*  தன் பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட,* 
    கேழல் திருஉருஆயிற்றுக்*  கேட்டும் உணர்ந்துமே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் பால் ஒரு கோடு இடை தான் கொண்ட - தன் திருமேனியில் ஏக தேசமாயிருப்பதொரு கோட்டினிடத்திலே தானாகவே இடந்தெடுத்துக் கொண்ட
கேழல் திரு உரு ஆயிற்று - ஸ்ரீ வராஹரூப மெடுத்த படியை
கேட்டும் உணர்ந்தும் - இதிஹாஸ புராணமுகங்களாலே கேட்டும் மனனம் பண்ணியும் வைத்து
சூழல்கள் சிந்திக்கில் - தம்தமமுடைய அபி மதங்கள் ஸித்திப்பதற்கு விரகு பார்க்குமளவில்
மாயன் கழல் அன்றி சூழ்வரோ - ஆச்சரிய சேஷ்டிதனான அப்பெருமானுடைய திருவடிகளையொழிய வேறொன்றை ஆச்ரயிப்பரோ?

விளக்க உரை

அழிந்த ஜகத்தை யுண்டாக்கினவளவே யல்லாமல், அந்தஜகத்தை ப்ரளயங்கொள்ள மஹாவராஹமா யெடுத்துரக்ஷித்த மஹாகுணத்தை யநுஸந்தித்தால் அவன்திருவடிகளே தஞ்ச மென்றிருக்க வேண்டாவோவென்கிறார். சூழல்கள் சிந்திக்கில்- சூழலாவது உபாயம்? ,நமக்கொரு உஜ்ஜீவநோ பாயம் சேமித்து வைத்துக் கொள்ள வேணுமே, என்று சிந்திப்பாருண்டே அங்ஙனே சிந்தைசெய்யுமளவில் என்றபடி. மாயன் கழலன்றிச் சூழ்வரோ?—ரக்ஷ்ய வர்க்கங்களை ரக்ஷிக்கவேண்டு மென்று நினைத்தவளவிலே தன்னை யழியமாறியும் காரியஞ் செய்யத துணியும் மாயவனது கழலையன்றி மற்றொன்றைப் பற்றுவாருண்டோ? பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாந் தேசுடைய தேவர் என்ற நாச்சியார்திருமொழிப் பாசுரம் நினைக்கத் தகும். ஆழப்பெரும்புனல்தன்னு ளழுந்திய—ஆழமான மஹார்ணவத்திலே அழுந்திய என்றாவது, பெரும்புனல் தன்னுள் ஆழவழுந்திய என்றாவது யோஜிப்பது. தாழப் படாமல்-காலதாமதத்திலே உருமாய்ந்து போகாதபடி; அனர்த்தப்டாதபடி; தரைப்படாதபடி. ஒரு கோட்டிடை கோடு – தம்ஷ்ட்ரா

English Translation

The Lord then came us a beautiful boar, and in a trice lifted the Earth, -submerged in deep deluge waters, -on his tusk teeth, knowing this, would seekers seek any thing other than his feel?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்