விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கஞ்சனும்காளியனும்*  களிறும்மருதும்எருதும்* 
  வஞ்சனையில்மடிய*  வளர்ந்தமணிவண்ணன்மலை*
  நஞ்சுஉமிழ்நாகம்எழுந்துஅணவி*  நளிர்மாமதியைச்* 
  செஞ்சுடர்நாவளைக்கும்*  திருமாலிருஞ்சோலையதே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கஞ்சனும் - கம்ஸனும்
காளியனுங் - காளிய நாகமும்
களிறும் - (குவலயாபீடமென்ற) யானையும்
மருதும் - இரட்டை மருதமரங்களும்
எருதும் - (அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும்

விளக்க உரை

முன்னடிகளிலடங்கிய வரலாறுகள் கீழ்ப் பலவிடங்களில் விரிக்கப்பட்டன. பின்னடிகளின் கருத்து; திருமலையிலுள்ள மலைப்பாம்புகள் பூர்ணசந்திரனைப்பார்த்து, அவனைத் தமது ஆமிஷமாகக் கருதி, மேற்கிளர்ந்த தமது நாவினால் அச்சந்திர மண்டலத்தை அளையா நிற்குமென்று- இத்திருமலையில் ஒக்கத்தைக் கூறியவாறாம்

English Translation

On the hill of Malirumsolai, the venom-spitting cobra raises its hood and licks the cool full-moon with its glistening red tongue. It is the hill abode of the Lord who grew up destroying by their own evil the serpent Kaliya, the elephant Kuvalayapida, the twin Arjuna trees, the bull Arishtanemi and the wicked Kamsa.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்