விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாட்டில் பிறந்தவர்*  நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    நாட்டில் பிறந்து படாதன பட்டு*  மனிசர்க்காய்,* 
    நாட்டை நலியும் அரக்கரை*  நாடித் தடிந்திட்டு,*  
    நாட்டை அளித்துஉய்யச் செய்து*  நடந்தமை கேட்டுமே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு - உலகத்தை ஹிம்ஸிக்கின்ற ராவணாதி ராக்ஷ்ஸர்களை ஆராய்ந்து சென்று கொன்று
நாட்டை அளித்து - (இப்படியாக) நாட்டைரக்ஷித்து
உய்ய செய்து - உஜ்ஜீவனப்படுத்தி
நடந்தமை கேட்டும் - பின்பு திருநாட்டுக்கு நடந்த படியைக் கேட்டிருந்தும்
நாட்டில் பிறந்தவர் - (அப்பெருமானுடைய திருக்குணங்கள் நடையாடுகிற) நாட்டிலே பிறந்தவர்கள்

விளக்க உரை

“அவதாரகார்யம் சமைந்தவளவிலே எழுந்தருளுகையன்றியே பதினோராயிரமாண்டு எழுந்தருளியிருந்து ரக்ஷித்த சீலாதிக்யத்தை யருளிச் செய்கிறார்” என்பது பன்னீராயிரப்படியின் அவதாரிகை. “தன்னை யொழியச்செல்லாமையைப் பிறப்பித்து இங்கேயவர்களை யிட்டுவைத்து, தானேயெழுந்தருளுகையன்றிக்கே கூடக்கொண்டுபோனானென்று, கீழ்ச்சொன்னவதிற் காட்டில் அதிக குணத்தை யருளிச்செய்கிறார்” என்பது பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸீக்தி. நாட்டில் பிறந்தவர் நாரணற்கன்றி ஆளாவரோ? ஸ்ரீராமகுணங்கள் நடையாடுகிற தேசத்திலே பிறந்த பாக்கியசாலிகள் அந்த ஸ்ரீராமபிரானுக்கன்றி யாளாவரோ? என்றபடி. ராவணவதமானபிறகு நான்முகக்கடவுள் வந்து பவாந் நாராயணோ தேவ: என்றனனாதலால் இங்கு இராமபிரானை நாராயண சப்தத்தினாலகுளிச்செய்கிறபடி. நாட்டில் பிறப்பது நாராயணனுக்கு (இராமபிரானுக்கு) ஆளாவதற்காகவே யென்பது முதலடியின் கருத்து. மேல் மூன்றடிகளாலே அவன் செய்த மஹோபகாரத்தைக் சொல்லுகிறது. கருமங்களுக்கு வசப்பட்ட ஸம்ஸாரிகளுங்கூட அருவருக்கும்படியான நாட்டிலே வந்து பிறந்தானே! என்று இதை நினைத்து உருக அருவருக்கும்படியான நாட்டிலே வந்து பிறந்தானே! என்று இதை நினைத்து உருக வேண்டாவோ? நாமெல்லாரும் பத்துமாஸம் கர்ப்பவாஸம் பண்ணினால் அவன் ததச்ச த்வாதசே மாஸே என்னும்படி பன்னிரண்டு மாஸம் கர்ப்பவாஸம் பண்ணினானே! என்று இதையும் நினைத்து உருகவேண்டாவோ? இப்படி பிறந்தது மாத்திரமேயோ? ஸம்ஸாரிகள்படாத பாடுகளையும் பட்டானே!, ஒருவன் பிறந்தால் இருக்கும் நாள் தானும் தன் மனைவியுமாகச் சேரவிருந்து ஜீவித்துப்போவதுண்டே, அப்படியுமன்றிக்கே பிராட்டி ஓரிடத்திலும் தான் மற்றோரிடத்திலுமாக வர்த்திக்க வேண்டினது முதலாகப்பட்ட பாடுகளையும் நினைத்து உருகவேண்டாவோ? இப்படிபடாத பாடுகள் பட்டது யாருக்காக? (மனிசர்க்கா) தங்களுக்காக அநுக்ரஹத்தாலே படுகிற இந்த மஹா குணத்தை குணஹாநியாச் சொல்லி நிந்திக்கும் நன்றி கெட்ட நம்போல்வார்க்காகவன்றோ இத்தனை பாடு பட்டது என்று, இதை நினைத்தும் உருகவேண்டாவோ? இன்னமும் விரோதி நிரஸனங்கள் பண்ணின படிகளையும் நினைக்க வேண்டாவோ? ஈற்றடிக்கு ஆறாயிரப்படி காண்மின்;- “இப்படி லோகத்தை ரக்ஷித்தருளிததிதம் ந:க்ருதம் கார்யம்-ப்ரஹருஷ்டோ திவமாக்ரம் என்று ப்ரஹ்மா விண்ணப்பஞ் செய்தபோதே யெழுந்தருளாதே ஸ்வவிச்லேஷத்தாலே விநஷ்டப்ராயமான திருநகரியில் சராசர ஜந்துஜாதத்தை யெல்லாம் மீண்டெழுந்தருளி யுய்யச்செய்து பின்னைத் திருநாட்டிலே யெழுந்தருளின இம்மஹாகுணத்தைக் கேட்டும் சேதநராபிருப்பர் பவாந் நாராயணோ தேவ: என்று சொல்லப்படுகிற தசரதாத்மஜனான நாராயணனுக்கு அடிமையாகாதிருக்கும்ப்டி யெங்ஙனே யென்கிறார்.”

English Translation

For the sake of humanity, Narayana took birth and walked on Earth, suffering countless miseries, then destroyed the plague of Rakshasas. He gave the kingdom to Vibhisana, and liberation to all knowing this, would mortals be devotees to anyone else?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்