விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்றுமண் நீர்எரிகால்*  விண் மலைமுதல்,* 
    அன்று சுடர்*  இரண்டு பிறவும்,*  பின்னும்
    அன்று மழை*  உயிர் தேவும் மற்றும்,* அப்பன் 
    அன்று முதல்*  உலகம் செய்ததுமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மண் நீர் எரி கால் விண் - பஞ்ச பூதங்ககளையும்
மலை முதல் - மலைகள் முதலானவற்றையும்
செய்ததும் - படைத்ததும்
அன்று - அந்த க்ஷ்ணத்திலேயாம்;
சுடர் இரண்டு - சந்திரன் ஸுர்யன் ஆகிய இரண்டு சுடர்ப்பொருள்களையும்

விளக்க உரை

இப்பாட்டின் கருத்தை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள் பூருவாசாரியர்கள். ஆதிஸ்ருஷ்டியைச் சொல்லுகிறதாக ஒரு நிர்வாஹம். கீழே பாணாஸுரனை வென்றி கொண்டவிருத்தாந்தம் சொல்லியிருப்பதாலும் மேற்பாட்டிலும் க்ருஷ்ணாவதார சரித மொன்று சொல்லிருப்பதாலும் இப்பாட்டையும் கீழ்ப்பாட்டோடே சேஷமாக்கி பாணாஸுரனுடைய செருக்கையடக்கினவன்று தான் ஜகத்து உண்டாயிற்றென்று ஆழ்வாரருளிச் செய்கிறார் என்பதாக மற்றொரு நிர்வாஹம். இந்த நிர்வாஹித்தின்படி ‘அன்று’ என்று இப்பாட்டில் அடிதோறும் வருவது வாணனை வென்ற வக்காலத்திலே என்ற பொருளிலாம். ஆத்ய ஸ்ருஷ்டியைச் சொல்லுதிறதாக நிர்வஹக்கிற பகூத்தில் அன்றே என்றது எல்லா ஸ்ருஷ்டிகளும் ஏகக்ஷ்ணத்திலேயே’ என்றபடி. “க்ரமஸ்ருஷ்டியன்று; யுகபத்ஸ்ருஷ்டியென்று கருத்து” என்பது பன்னீராயிரவுரை.

English Translation

Beginning with water, earth, fire, wind, and sky, and then the mountains and radiant orbs, and thereafter the rains, the gods, the living and all else, -how my father made the first Universe!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்