விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நேர்சரிந்தான்*  கொடிக் கோழிகொண்டான்,*  பின்னும் 
    நேர்சரிந்தான்*  எரியும் அனலோன்,*  பின்னும்
    நேர்சரிந்தான்*  முக்கண் மூர்த்திகண்டீர்,*  அப்பன் 
    நேர்சரி வாணன்*  திண்தோள் கொண்ட அன்றே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திண்தோள் கொண்ட அன்று - திண்ணிய தோள்களைத்துணித்து வென்றி கொண்ட அக்காலத்திலே
கோழி கொடி கொண்டான் - மயிலைக் கொடியாகக் கொண்ட ஸீப்ரமணியன்
நேர் சரிந்தான் - எதிர்நில்லாமல் சாய்ந்துபோனான்;
பின்னும் - அதற்குமேலே
எரியும் அனலோன் - ஜ்வலித்துக்கொண்டிருந்த அக்நியும்

விளக்க உரை

பாணாஸுரயுத்த விஜயவ்ருத்தாந்தம் கூறுவதிப் பாட்டு. பலிசக்ரவர்த்தியின் ஸந்ததியிற் பிறந்த பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள் ஒரு நாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு அவனிடத்தில் மிகுந்த ஆசை பற்றியவளாய் தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து அவள்மூலமாய் அந்தப்புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருத்தனென்று அறிந்து கொண்டு ‘அவனைப் பெறுவதற்கு உபாயஞ் செய்ய வேண்டும்’ என்று அத்தோழியை வேண்ட, அவள் தன் யோகவித்தை மஹிமையினால் த்வாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக் கொண்டுவந்து அந்த: புரத்திலே விட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தவ்வாணன் தன் சேனையுடன் அதிருத்தனை யெதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப்போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாருங் கலங்கியிந்த போது, நாரத முனிவனால் நடந்த வரலாறு சொல்லப் பெற்ற ஸ்ரீக்ருஷ்ண பகவான் பெரிய திருவடியை நினைத்தருளி, உடனே வந்துநின்ற அக்கருடாழ்வானது தோள்மேலேறிக் கொண்டு பலராமன் முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்திற் கெழுந்தருளும்போதே அப்பட்டணத்தின் ஸமீபத்தில் காவல்காத்துக் கொண்டிருந்த சிவபிரானது பிரமத கணங்கள் எதிர்த்துவர, அவர்களை யெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானால் ஏவப்பட்டதொரு ஜ்பரத்தேவதை மூன்றுகால்களும் மூன்றுதலைகளு முள்ளதாய் வந்து பாணனைக் காப்பாற்றும் பொருட்டு யுத்தஞ்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தை யுண்டாக்கி அதன் சக்தியினாலே அதனைத் தூரத்திவிட்டபின்பு, சிவபிரானது அநுகரர்களாய்ப் பாணாஸுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்நி தேவர் ஐவரும் தன்னை டெதிர்த்துவர, அவர்களையும் நாசம் செய்து பாணாஸுரனோடு போர் செய்யத்தொடங்க, அவனுக்குப் பக்கபலமாக சிவபெருமானும் ஸுப்ரம்மண்யன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போரிட, கண்ணன் தான் ஜ்ரும் பணாஸ்ரத்தைப் பிரயோகித்துச் சிவன் ஒன்றும் செய்யாது கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்வடைந்துபோகும்படி செய்து ஸுப்ரம்மண்யனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்து ஓட்டி, பின்னர்அனேகமாயிரம் ஸுர்யர்க்கு ஸமானமான தனது சக்கராயுதத்தை யெடுத்துப் பிரயோகித்து அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரை தாரையாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில் பரமசிவன் அருகில் வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால் அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளிப் பின் அவன் தன்னைத்தொழுது அதிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க அதன் பின் மீண்டுவந்தனன் என்பது பாணாஸுரபங்க விருத்தாந்தம். கொடிக்கோழிகொண்டான்-கோழியென்று மயிலுக்கும் பெயர். மயூரத்வஜனான ஸுப்ரமண்யன் முந்துற முன்னம பங்கப்பட்டானென்கிறார். (பின்னும் எரியுமனலோன் நேர்சரிந்தான்) ஈடு—‘ அவ்வளவிலே நாற்பத்தொன்பது அக்நிகளும் பெரிய கிளர்த்தியோடே யெரிந்து தோற்றிற்று; அவையுமெல்லாம் பின்னிட்டன.”

English Translation

The Cock-bannered god ran away, know ye! Then the burning Fire-god ran away, then the three-eyed god too ran away, when my Father cut the strong arms of Bana

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்