விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாளும்எழ*  நிலம் நீரும்எழ*  விண்ணும் 
    கோளும்எழ*  எரி காலும்எழ,*  மலை
    தாளும்எழ*  சுடர் தானும்எழ,*  அப்பன் 
    ஊளிஎழ*  உலகம்உண்ட ஊணே     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நான் எழவும் - காலவ்யவஸ்தைபேரும் படியாகவும்
நிலம் நீர் எழவும் - நிலமும் நீரும் நிலை குலைந்து போகவும்
விண்ணும் கோளும் எழ - ஆகாசமும் க்ரஹங்களும் நிலை குலைத்து போகவும்
எரி காலும் எழ - நெருப்பும் காற்றும் நிலைகுலைந்து போகவும்
மலை தாள் எழவும் - மலைகள் அடிபெயர்ந்து போகவும்

விளக்க உரை

மஹாப்ரளயத்தில் ரக்ஷித்தபடியை இப்பாட்டில் அருளிச்செய்கிறார். கலை யென்றும் காஷ்டை யென்றும் முஹீர்த்தமென்றும் நாழிகையென்றும் யாமமென்றும் இரவென்றும் பகலென்றும் சொல்லுகிற காலப்பகுப்புகள் ஒன்றுமின்றியே காலவ்யவஸ்தை நிலை குலைந்து போகப்பட்டதாம் பிரளயத்தில்; அது சொல்லுகிறது நாளுமெழ என்று. கால நிபந்தனைக்குக் காரணம் ஆதித்தியனுடைய கதியேயாதலால் பிரளயத்தில் அவ்வாதித்தியன் இலனாகவே காலவ்யவச் தேசங்களும் இல்லையாயினவென்க. இங்கே ஈட்டு ஸ்ரீ ஸீக்தி காண்மின்; “ஆண்டென்றும் மாஸமென்றும் நாளென்றும் கலை யென்றும் காஷ்டையென்றும் சொல்லுகிறவையெல்லாம் ஆதித்யனுடைய கத்யாகதியாலே வருகிறவையிறே; வ்யவச்சேதகனான ஆதித்யன் உள்ளே புக்கால் வ்யவச்சேத்யமான இவையும் போமித்தனையிறே.” நிலம் நீரும் விண்ணும் கோளும் எரிகாலும் மலைசுடர் தானுமெழ—ப்ருதிவி முதலான பஞ்ச பூதங்களும் ஸகலகுலாசலங்களும் நக்ஷ்த்ர ஜ்யோதிஸ்ஸீக்களும் ஆகிய இவையெல்லாம் உள்ளே புக உண்டருளினானென்கிறது. மலைதாளுமெழ என்ற விடத்து ‘மலையும் தாளும்’ என்று பொருளன்று; மலைகளானவை தாளோடே (அடியோடே) பறிந்து உள்ளே புக என்றபடி. வேர்க்குருத்தோடே பறிய வென்க. ஊளியெழ—ஊளி யென்று ஓசைக்குப்பெயர்; கீழ்ச்சொன்னவற்றையெல்லாம் உறிஞ்சியுண்கிற போது ஓசை யுண்டாகுமே; அது சொன்னபடி இனி, ஊளி யென்று பசிக்கும் பேருண்டு. அப்பொருளை முக்கியமாகக் கொண்டார் பன்னீராயிரவுரை காரர்; “பசித்துண்டானென்று தோன்றும்படியாக” என்பதுஉரை.

English Translation

The day disappeared, Earth and water disappeared, the sky and stars disappeared. Fire and Wind disappeared, mountains and plains disappeared, the radiant orbs disappeared, the day my Father feasted on the Universe with relish!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்